For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓவர் நைட்டில் அம்பானி.. ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்.. இந்திய அரசால் வந்த லக்

அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் எல்லோரும் ஒரே நாளில் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்..வீடியோ

    கவுஹாத்தி: இந்திய எல்லை பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனாதான் தொல்லையாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக அருணாசலப்பிரதேச எல்லையில்தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு இருக்கும் ராணுவத்தால் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள்.

    போம்ஜா என்ற அந்தக் கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள். இதற்குப் பின் அழகான வரலாறு ஒன்று இருக்கிறது.

    ராணுவம்

    ராணுவம்

    போம்ஜா பகுதியில் இந்திய ராணுவம் கடந்த 5 வருடம் முன்பு ராணுவ அமைவிடம் உருவாக்க நிலம் வாங்கியது. இதற்காக மொத்தம் 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்த நிலம் வாங்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    5 வருடம் கழித்து தற்போது இருக்கும் விலை என்னவோ அந்தத் தொகை நில உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காகப் பெரிய விழா நடத்தப்பட்டது. அருணாசலப்பிரதேச முதல்வர் 'பேமா கான்து' அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்தார்.

    கோடி

    கோடி

    அங்கு 31 குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40.8 கோடி செலவாகி இருக்கிறது. இதில் அதிகமாக ஒரு குடும்பம் 6.73 கோடி வாங்கியுள்ளது. இன்னொரு குடும்பம் 2.45 கோடி வாங்கியுள்ளது. இன்னும் 29 குடும்பங்கள் 1.09 கோடி வாங்கியுள்ளது.

    பணக்கார கிராமம்

    பணக்கார கிராமம்

    இதனால் தற்போது அந்தக் கிராமம் தான் இந்தியாவில் பணக்கார கிராமம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதேபோல் அந்தக் கிராமத்தில் மட்டுமே தற்போது அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். முறையான தகவல்கள் கிடைத்த பின் அந்தக் கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமமா என்று அறிவிக்கப்படும்.

    English summary
    All household in an Arunachal Pradesh village becomes crorepati. Indian government gave 40.3 crore to 31 families for land acquisition by army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X