For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் எல்லா எம்பிக்களும் நரேந்திர மோடிக்கு எதிர் அணியில்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வெற்றி பெற்ற எந்த ஒரு எம்பியும் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதால் கேரளத்து குரல் நாடாளுமன்றத்தில் தனித்து, ஆட்சியாளர்களுக்கு எதிர்த்து ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த மாநிலத்தில் வென்ற இடதுசாரிகளும் காங்கிரசும் பாஜகவை எந்த நிலையிலும் ஆதரிக்கப் போவதில்லை.

All Kerala MPs on other side of Modi

நேர் எதிர்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் மட்டும்தான் பாஜக தனது கணக்கை துவங்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாஜகவோ அல்லது அதன் ஆதரவு கட்சிகளோ எம்.பிக்களை பெற்றன. ஆனால் நேர் எதிர்மாறாக கேரளாவில் உள்ள 20 இடங்களிலும் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இடது சாரி ஆதரவு பெற்ற சுயேச்சைகள் இரு இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இடங்களிலும், புரட்சிகர சமூக கட்சி, கேரளா காங்கிரஸ் (மணி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பல தனித்தன்மைகள்

இந்திய அளவில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 9 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது, அதற்கு அடுத்த பெரிய வெற்றி அக்கட்சிக்கு கேரளாவில்தான் கிடைத்துள்ளது. அதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கேரளாவை சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல வெற்றி பெறவில்லை.

English summary
Now that the dust has settled down after the Lok Sabha polls and the 
 spotlight shifts to parliament, there is one thing you can certainly 
 expect from the 20 MPs from Kerala -- not say 'aye' in favour of prime 
 ministerial nominee Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X