For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

All-party meet ahead of Winter Session likely today
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 5- ந்தேதி தொடங்குகிறது. இக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும். அதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கமல்நாத் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் இன்று இரவு 7 மணியளவில் கூடுகிறது. பொதுவாக குளிர்கால கூட்டத்தொடர் ஒரு மாதம் வரை நடைபெறும்.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கார், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.

English summary
Parliamentary Affairs Minister Kamal Nath on Monday called for an all-party meet at 7 pm ahead of the upcoming Winter Session of Parliament, a report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X