For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாட்டையை எடுத்த மத்திய அரசு.... ஜகா வாங்கிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு அன்றும் இயங்கும்!

பெட்ரோல் டீசல் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் டீசல் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14 ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

All Petrol stations open on sundays,says Petrol diesel dealer’s association said.

மேலும் இந்த நடைமுறை 8 மாநிலங்களில் விடுமுறை அமலுக்கு வரும் என்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறையினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிகையானது முன்னெடுக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து வரும் 14ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு தோறும் இயங்கும் என்றும், விடுமுறை முடிவு கைவிடப்படுகிறது என்றும் பெட்ரோலிய விற்பனையாளரகள் சங்கம் அறிவித்துள்ளது.

English summary
All Petrol stations in India open on sundays,says Petrol diesel dealer’s association said Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X