For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதார்ல எவ்ளோ பெரிய ஓட்டை.. உத்தரகாண்டில் 800 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 1 தான் பிறந்தநாளாம்

உத்ராகண்டில் ஒரே கிராமத்தை சேர்ந்த 800 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 1ம் தேதி பிறந்தநாள் என்று ஆதார் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டேராடூன்: உத்ராகண்ட் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 800 குடும்பத்தினருக்கு ஆதார் அட்டையில் ஒரே மாதிரியாக ஜனவரி 1ம் தேதி பிறந்தநாள் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது சர்ச்சை எழுப்பியுள்ளது.

ஹரித்வாரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலையில் உள்ள கைந்தி கதா கிராமத்தில் வன் குஜ்ஜார் இனத்தை சேர்ந்த 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்மையில் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த முகமது கான் என்பவருக்க வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் தவறுதலாக பிறந்த தேதி ஜனவரி 1 என அச்சடிக்கப்பட்டிருந்தது.

All residents of Uttarakhands Gaindi Khata village were born on January 1 as per Aadhaar card

இவருக்கு மட்டுமல்ல முகமதின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அலாப்தின் ஆதார் அட்டையிலும் ஜனவரி 1 தான் பிறந்த தேதி என்று அச்சிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் அலாப்தினின் ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் இதே போன்று தான் ஜனவரி 1 பிறந்த தேதி என்று பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது தான் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.

அந்த கிராமத்தை சேர்ந்த 800 குடும்பத்தினருக்கும் இப்படித்தான் ஆதார் அட்டையில் ஒரே பிறந்த தேதி அச்சடிக்கப்பட்டுள்ளதாம். ஆதார் அட்டை என்றால் தனி நபருக்கான தனி அடையாளம் என்று சொன்னார்கள் ஆனால் அரசாங்கம் அளித்த ஆதார் அட்டையில் பிறந்தநாள் கூட ஒரே மாதிரி தான் உள்ளது என்று அந்தப் பகுதியினர் கூறுகின்றனர்.

உத்தரகாண்டில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதார் குளுறுபடிகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ராவில் 3 கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஜனவரி 1 பிறந்த தேதி என்று அச்சிடப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் பலருக்கும் வயது மற்றும் பிறந்த தேதியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகார் வந்த வண்ணம் உள்ளன.

English summary
All residents of Uttarakhand's Gaindi Khata village were born on January 1 as per Aadhaar card, People were shocked that We were told we would be getting a unique identification number. But what's unique about it? Even our birthdays are the same now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X