For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100ம் வருட கொண்டாட்டம்.. ஜிங்பிங் பிடிவாதம்.. லடாக்கில் சூழ்கிறது போர் மேகம்.. இனி என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் இந்தியா - சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் இதனால் கவனம் பெற்றுள்ளது .

இந்தியா - சீனா இடையே இதுவரை முப்பது முறைக்கும் மேல் அமைதி பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. மே மாத இறுதியில் நடந்த பேச்சுவார்த்தை தொடங்கி பெரிய அளவிலும், சிறிய அளவிலும் நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டது.

ஆனால் ஒரு சில பேச்சுவார்த்தையில் சின்ன சின்ன உடன்படிக்கை எட்டப்பட்டாலும் பெரிய அளவில் எதுவும் எல்லையில் அமைதியை கொண்டு வரவில்லை. பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையேயான மீட்டிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீட்டிங், லெப்டினென்ட் ஜெனரல் மீட்டிங் என்று எதுவும் பலன் அளிக்கவில்லை,.

பொறுக்க மாட்டோம்.. சீனாவை கலங்க வைக்கும் குட்டி தீவு.. தைவான் அளித்த வார்னிங்.. உச்ச கட்ட மோதல்! பொறுக்க மாட்டோம்.. சீனாவை கலங்க வைக்கும் குட்டி தீவு.. தைவான் அளித்த வார்னிங்.. உச்ச கட்ட மோதல்!

நேற்று தோல்வி

நேற்று தோல்வி

இந்த நிலையில் நேற்று இந்தியா சீனா இடையே லடாக் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே ரஷ்யாவில் இந்த ஆலோசனை நடந்தது.இதில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் இது இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதியை கொண்டு வர கூடிய வலுவான ஒப்பந்தம் கிடையாது.

ஏன் வலுவானது இல்லை

ஏன் வலுவானது இல்லை

ஏனென்றால் இந்த ஒப்பந்தத்தில் படைகளை வாபஸ் வாங்குவது குறித்து உறுதியான முடிவுகள் எதுவும் இல்லை . எல்லையில் மோதல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உறுதியான வழிகாட்டுதல் இல்லை. அதோடு இந்தியாவின் கோரிக்கையான, லடாக்கில் மே 5ம் தேதிக்கு முன்பு இருந்த நிலைமைக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் பூர்த்தி செய்யப்படவில்லை. பெயருக்கு அமைதி வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

ஏன் மோசம்

ஏன் மோசம்

இதனால் இந்தியா - சீனா இடையில் இனி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். லடாக்கில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் இந்தியா - சீனா இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இரண்டு நாட்டு மோதலை தீர்க்க இரண்டே வழிதான் இருக்கிறது, அது இரன்டுமே கொஞ்சம் சிக்கலானது என்று கூறுகிறார்கள்.

இறுதி பேச்சுவார்த்தை

இறுதி பேச்சுவார்த்தை

முதல் வழி.. இறுதியாக இன்னொரு பேச்சுவார்த்தை. இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு என்று குழுவை உருவாக்கி, பொதுவான இடத்தில், ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் மேற்பார்வையில் பேச்சுவார்த்தையை கடைசியாக ஒருமுறை நடத்தலாம். இரண்டு நாட்டு பிரதமர் மற்றும் அதிபர் இதை மேற்பார்வையிடலாம். ஆனால் சீனா பேச்சுவார்த்தையை மதிப்பது இல்லை. பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இதனால் இந்தியா இந்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்.

சின்ன மோதல்

சின்ன மோதல்

இரண்டாவது விஷயம்தான் கொஞ்சம் அச்சம் தரக்கூடியது. எல்லையில் சின்ன மோதல் நடக்க வாய்ப்புள்ளது. முழு வீச்சில் பெரிய போர் என்று இல்லாமல் சின்ன சின்ன போராக, மோதலாக இது உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாடுகளும் இந்த மோதலை நோக்கி செல்லவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாட்டு ராணுவத்தின் செயலும் கூட அதையே நிரூபிப்பதாக கூறுகிறார்கள்.

எல்லை படைகள்

எல்லை படைகள்

இரண்டு நாடுகளும் எல்லையில் தற்போது படைகளை குவித்து வருகிறது. அதேபோல் போருக்கு சாதகமாக படைகள் குவிக்கப்பட்டு, மலை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. பனிக்காலத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போருக்கு தயார் ஆகாத நிலையில் எல்லையில் இப்படி மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இல்லை. இரண்டு நாடுகளும் சிறிய சண்டையை உருவாக்க முயல்கிறது என்று கூறுகிறார்கள்.

சண்டை காரணம்

சண்டை காரணம்

  • பின் வரும் விஷயங்கள் இரண்டு நாடுகளும் போருக்கு தயார் ஆவதை காட்டுகிறது என்று கூறுகிறார்கள்.
  • இரண்டு நாட்டு எல்லையில் போர் விமானங்கள் குவிப்பு.
  • இரண்டு நாடுகளும் படைகளை குவிப்பது.
  • அதிக எண்ணிக்கையில் பீரங்கிகள், ஆயுதங்களை கொண்டு வருகிறது. நவீன ஆயுதங்களை வாங்குவது.
  • மலை பகுதிகளை பிடிப்பது. போர் பயிற்சிகளை செய்வது.
  • ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியது என்று பல விஷயங்கள் போருக்கு தயார் ஆவதற்கான அறிகுறியாக கூறப்படுகிறது.
சீனா என்ன

சீனா என்ன

அதேபோல் இரண்டு நாடுகளும் போரை விரும்பவில்லை என்றாலும் எல்லையில் முதலில் படையை வாபஸ் வாங்க விரும்பாது என்கிறார்கள். முக்கியமாக சீனா எல்லையில் படையை வாபஸ் வாங்காது. சீனா படையை வாபஸ் வாங்காத பட்சத்தில் இந்தியாவும் படையை வாபஸ் வாங்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். சீனாவின் குணம் கண்டிப்பாக சிறிய மோதலுக்கு வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

இன்னொரு பக்கம் அடுத்த மாதம் சீனாவில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றான்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. 2021ல் அந்த கட்சி தொடங்கி நூறு வருடம் ஆகிறது. அடுத்த மாதம் இதற்கான அறிவிப்பில் அதிபர் ஜிங்பிங் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள். இந்த கொண்டாட்டம் காரணமாக கண்டிப்பாக எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்காது. அப்படி செய்தால் அது ஜிங்பிங்கை வலிமை இல்லாத தலைவராக காட்டும் என்று சீன தரப்பு நினைக்கிறது.

ஜிங்பிங் என்ன நினைக்கிறார்

ஜிங்பிங் என்ன நினைக்கிறார்

ஜிங்பிங் உலகின் நம்பர் 1 நாடாக, அதிகாரம் மிக்க நாடாக சீனாவை கொண்டு வர நினைக்கிறார். தன்னை மாவோவிற்கு அடுத்து பெரிய தலைவராக காட்ட நினைக்கிறார். அதனால் கண்டிப்பாக அவர் எல்லையில் படைகளை வாபஸ் வாங்க மாட்டார். இதனால் கண்டிப்பாக எல்லையில் சிறிய அளவிலாவது மோதல் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதற்குள் பேச்சுவார்த்தை நடந்து அமைதி திரும்பினால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது .

English summary
No more talks, All the options exhausted, What left for India and China in the bucket?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X