For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்கும் முடிவு காங்கிரஸின் தலைமை எடுத்தது.. சித்தராமையா பேட்டி

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்ததாக சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்ததாக சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

Alliance with JDS is Congress heads decision says, Siddaramaiah

தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபை அமைத்துள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அவர் ஆளுநரிடம் பேட்டி அளித்துள்ளார். இதன் பின் குமாராசாமியும், சித்தராமையும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அதில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க ஆதரவளிக்கும் முடிவை டெல்லி தலைமை எடுத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினை ஆட்சியில் அமர்த்தலாம் துன்று மேலிடம்தான் முடிவு செய்தது. இதுவரை ஆட்சி அமைப்பதற்கு எந்த விதமான நிபந்தையும் விதிக்கப்படவில்லை.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. எண்களின் கோரிக்கையை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் விரைவில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆளுநர் பாஜக கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். ஆளுநர் பாஜகவிற்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்துள்ளார். ஆளுநர் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

English summary
Alliance with JDS is Congress head's decision says, Siddaramaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X