For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்வார் படுகொலை: எங்களுக்கு பாஜக எம்எல்ஏவுடன் நட்பு இருக்கிறது.. போலீசை மிரட்டிய கைதிகள்!

பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பசு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவரை பொறுமையாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்- வீடியோ

    ஜெய்ப்பூர்: பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அந்த மூன்று பேரும் தங்களுக்கு பாஜக எம்எல்ஏவுடன் தொடர்பு இருக்கிறது, தங்களை எதுவும் செய்ய முடியாது என்று போலீசை மிரட்டி இருக்கிறார்கள்.

    ரஃபர் என்ற விவசாயி ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரும், அவரது நண்பர் அஸ்லாம் கானும் ஒன்றாக சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பசுமாடு வாங்கி கொண்டு வரும் பொது இந்த சம்பவம் நடநடத்துள்ளது.

    Alwar Cow Lynching: We are BJP MLA Men, killers of Rabar threaten police

    விவசாய தேவைக்காக அவர்கள் மாடு வாங்கி வந்துள்ளனர். அப்போது பசு தீவிரவாதிகள் அவரை மறைத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இன்னும் இருவர் பாஜகவினருக்கு நெருக்கமானவர்.

    இதனால், தற்போது அல்வாரின் பாஜக எம்எல்ஏ கயன்தேவ் ஆஜா இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அதில் ''இந்த சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கொல்லப்பட்ட நபர் ஒரு பசு திருடன். அவர் பசுவை திருடத்தான் அந்த இரவில் வந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கிறது'' என்றுள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்னொரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அதில், போலீஸ் நிலையத்தில் அந்த மூன்று குற்றவாளிகளும், நாங்கள் மூன்று பேரும் எம்எல்ஏவின் ஆட்களை, நங்கள் சீக்கிரம் வெளியே வந்து விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் தற்போது பாஜக கட்சி சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

    English summary
    Alwar Cow Lynching: We are BJP MLA Men, killers of Rabar threaten police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X