For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில், அமர்சிங்கின் ‘லோக் மஞ்ச்’ வேறு அரசியல் கட்சியுடன் இணைகிறது: ஜெயப்பிரதா அறிவிப்பு

Google Oneindia Tamil News

Amar's Lok Manch will soon merge with some party: Jayaprada
ராம்பூர்: அமர்சிங்கின் ‘ராஸ்டிரிய லோக் மஞ்ச்' விரைவில் வேறு அரசியல் கட்சியுடன் இணைய இருப்பதாக ஜெயப்ரதா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் அமர்சிங். கடந்த 2010ம் ஆண்டு அமர்சிங்கிற்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்குடன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறினார் அமர்சிங். அப்போது அவருடன் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற ஜெயப்பிரதாவும் வெளியேறினார்.

அதன்பின்னர் ராஷ்டிரிய லோக் மஞ்ச் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய அமர்சிங்கால், சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட பிடிக்க இயலவில்லை. எனவே, லோக் மஞ்ச் கட்சியை வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார் அமர்சிங்.

இது குறித்து நேற்று ஜெயப்பிரதா எம்.பி கூறியதாவது, ‘ராஷ்டிரிய லோக் மஞ்ச் கட்சி, விரைவில் வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணையும். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் அமர்சிங் விரைவில் அறிவிப்பார். பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டதால் லோக் மஞ்ச் கட்சியை இணைப்பதில் தாமதம் செய்யக்கூடாது.

ராம்பூரில் ராம்பூரில் சுற்றுப்பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசின் செய்திகளை பரப்பி வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தனது பேச்சில் ஜெயப்பிரதா காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் புகழ்ந்து பேசியுள்ளதால், அவரது கட்சி காங்கிரசுடன் இணையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
The Rampur MP Jayapradha told reporters here last evening that Rashtriya Lok Manch, floated by Amar Singh, will soon merge with a political outfit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X