For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமர்நாத் புனித பயணம்: இதுவரை 2.84 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அமர்நாத்: அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்களில் இதுவரை 2 லட்சத்து 84 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை சென்று வருகிறார்கள்.

Amarnath yatra: 2.84 lakh pilgrims pay obeisance

இதுவரை 2 லட்சத்து 84 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிவிட்டதாக அறியப்படுகிறது.

ஞாயிறு மட்டும் 7 ஆயிரத்து 200-க்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு புனித யாத்திரை செல்வதற்கு ஏற்றார் போல் வானிலை இருப்பதால் பால்டல், நுன்வான் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த பெண்கள், சாமியார்கள் உள்பட பக்தர்கள் பலர் குகை கோவிலுக்கு புனித யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

English summary
The Amarnath yatra resumed today after normalcy returned to the Baltal base camp which witnessed clashes between ponywallas and community kitchen operators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X