For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், கேரளாவில் அம்பேத்கர், மகாத்மா காந்தி சிலைகள் சேதம்

தமிழகம், கேரளாவில் அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை/திருவனந்தபுரம்: தமிழகம் மற்றும் கேரளாவில் அம்பேத்கர், மகாத்மா காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற உடன் அங்கிருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

Ambedkar, Gandhi statues vandalised in TN, Kerala

இது பெரும் சர்ச்சையானது. எச். ராஜாவுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை பாஜக பிரமுகர் முத்துராமன் சேதப்படுத்தினார்.

இதனால் தமிழகம் கொந்தளித்தது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னர் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் உத்தப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலையை விஷமிகள் சேதப்படுத்தினர்.

கேரளாவின் கண்ணூரில் மகாத்மா காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தேசத் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகள் தொடருவதால் பதற்றம் நீடிக்கிறது.

English summary
Ambedkar Statue Tamil Nadu and Mahatma Gandhi statue in Kerala were found disgraced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X