For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் அமித்ஷா ஹெலிகாப்டர் தரையிறங்க தடை.. பேரணிக்கும் அனுமதி மறுப்பு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வாங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் மீதம் உள்ளது. இந்த தேர்தல் பணிகளில் தேசியத் தலைவர்கள் முதல் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் வரை கடும் பிசியாக உள்ளனர்.

தேசிய தலைவர்கள் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு பறந்து பறந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராகுல்காந்தி, மோடி, அமித்ஷா, மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்லாது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பறந்து பறந்து பணியாற்றி வருகிறார்கள்.

மல்லிப்பூ, காட்டன் புடவை.. பளிச் முகம்.. எப்படி இருந்த நிர்மலாதேவி இப்படி ஆயிட்டாரே! மல்லிப்பூ, காட்டன் புடவை.. பளிச் முகம்.. எப்படி இருந்த நிர்மலாதேவி இப்படி ஆயிட்டாரே!

பிரச்சாரம்

பிரச்சாரம்


இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஜாதவ்பூர் மற்றும் வடக்கு 24 பார்கன்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, இன்று பிரச்சாரம் செய்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூருக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வந்தார்.

தரையிறங்க தடை

தரையிறங்க தடை

ஆனால் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் அங்கு நடைபெறயிருந்த சாலை வழிப் பிரச்சாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை

தடை

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது

அமித்ஷாவின் பேரணிக்கு இப்போது விதிக்கப்பட்ட தடையோடு சேர்த்து 5 முறை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

நிர்வாகம்

நிர்வாகம்

இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யனாத்தின் ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தில் தரையிறங்கவும் மம்தா மறுத்துவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 3 ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வதற்காக வடக்கு தினஜ்பூரில் பாலுர்கட் பகுதியில் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதோடு அவரது பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் பேரணி என்ற போர்வையில், வாக்குக்காக மக்களுக்கு பா.ஜ.க அதிக பணம் கொடுத்து வருகிறது என குற்றச்சாட்டு அந்த மாநிலத்தில் உள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

குறிப்பாக, வாரணாசியில் மோடியின் வருகைக்காக மலர் தூவப்பட்டு ஏராளமான பணத்தை வாரி இறைத்ததாகக் குற்றசாட்டு எழுந்தது. அதோடு ஆறாம் கட்ட வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு படையினரின் உடையில் தொண்டர்களை அனுப்பி வைத்து பா.ஜ.க வாக்கு சேகரித்தாகவும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி இருந்தார்.

மக்களவை தொகுதி

மக்களவை தொகுதி

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அமித்ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்க அனுமதி மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமித்ஷாவின் ஜாதவ்பூர் பொதுக்கூட்டம் நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்குவங்க மாநிலம், ஜாய்நகர் மக்களவைத் தொகுதியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

பாஜக வெற்றி

பாஜக வெற்றி

அப்போது பேசிய அவர் நான் பிரச்சாரம் செய்வதை வேண்டுமானால் மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தலாம், ஆனால் பாஜகவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது என்று பேசினார்.

English summary
Mamta Banerjee Government denied permission to land Amitshah's helicopter and also for rally in Jadavpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X