For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன்... குடியுரிமை திருத்த சட்டம் அமல்... அமித்ஷா அதிரடி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொரோனா தடுப்பூசி செயல்முறை முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் தொடர்பாக சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால் இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை நிலை பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

Amit Shah has said the CAA Act would be implemented once the corona vaccination process is completed

மேற்கு வங்காளத்தின் தாகூர்நகரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:- குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ) தொடர்பாக நாங்கள் ஒரு தவறான வாக்குறுதியை அளித்ததாக மம்தா தீதி(அக்கா) கூறினார். அவர் சிஏஏ-வை எதிர்க்கத் தொடங்கினார். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பாஜக எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது.

தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என உச்சரிப்பார் - அமித் ஷா சவால்தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என உச்சரிப்பார் - அமித் ஷா சவால்

புதிய குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதாக 2018-ல் மோடி அரசு உறுதியளித்தது. 2019 ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அதனை வைத்திருந்தோம். ஆனால் கடந்த ஆண்டு நாட்டில் தொற்று நோய் தாக்கியதால் சிஏஏ-இன் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. கொரோனா தடுப்பூசி செயல்முறை முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்.

எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் தொடர்பாக சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால் இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமை நிலை பாதிக்கப்படாது என்று அமித் ஷா கூறினார். மேற்கு வங்கத்தின் மாதுவா சமூகத்திற்கு சிஏஏ மிகவும் பயனளிக்கும் என்று அமித் ஷா கூறினார்.

English summary
Union Home Minister Amit Shah said the CAA Act would be implemented once the corona vaccination process is completed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X