For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடு இரவில் மீட்டிங் நடத்திய அமித் ஷா.. சிந்தியாவை வளைத்தது எப்படி.. நேற்று இரவு என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலையில் இருப்பதால் நேற்று இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலையில் இருப்பதால் நேற்று இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்புதான் இன்று சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்கிறார்கள்.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக நடந்த மீட்டிங்கில் அதிரடி முடிவு எடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 19 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

    18 எம்எல்ஏக்கள் இதில் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது. சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் இவர்கள். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆபரேஷன் கமலா இல்லை.. இது ஆபரேஷன் சிந்தியா.. ம.பியில் புயலை கிளப்பும் ஜோதிராதித்யா.. பரபர பின்னணி!ஆபரேஷன் கமலா இல்லை.. இது ஆபரேஷன் சிந்தியா.. ம.பியில் புயலை கிளப்பும் ஜோதிராதித்யா.. பரபர பின்னணி!

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழும் நிலையில் இருப்பதால் நேற்று இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளார். 19 எம்எல்ஏக்கள் தலைமறைவானது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உடன் இருந்தார்.

    யார் இவர்கள்

    யார் இவர்கள்

    மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிராக களமிறங்கி இருக்கும் 18 எம்எல்ஏக்களும் சிந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள். சிந்தியா முதல்வர் ஆக வேண்டும் என்று இவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இவர்களை அழைத்துக் கொண்டுதான் சிந்தியா பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலைதான் சிந்தியா டெல்லிக்கு திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முடிவு என்ன செய்தார்கள்

    முடிவு என்ன செய்தார்கள்

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க இதற்கு முன்பே பாஜக முயன்றது. ஆனால் கமல்நாத் தீவிரமாக முயன்று, ரிசார்ட்டிற்கு சென்ற எம்எல்ஏக்களை எல்லாம் மீட்டு தன் பக்கம் கொண்டு வந்தார். தற்போது பாஜக எதுவும் செய்யாமல் தானாக ஆட்சி கவிழும் நிலைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை பயன்படுத்திக் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயல்கிறது என்கிறார்கள்.

    எப்படி வளைத்தது

    எப்படி வளைத்தது

    கமல்நாத் மீது சிந்தியா பல நாட்களாக அதிருப்தியில் இருந்தார். இதை வெளிப்படையாக சிந்தியா வெளிப்படுத்தினார். இதைத்தான் தற்போது பாஜக பயன்படுத்திக்கொண்டது. இதை வைத்துதான் அமித் ஷா சிந்தியாவை வளைத்துள்ளார். நேற்று இரவு நடத்திய மீட்டிங்கிலேயே மத்திய பிரதேச அரசியல் தலைவிதி முடிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போதே சிந்தியாவிற்கு பதவி விலக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். இதையடுத்து இன்று அதேபோல் சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

    செம பிளான்

    செம பிளான்

    இதனால் விரைவில் சிந்தியாவிற்கு பாஜக முக்கிய பொறுப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். முதலில் சிந்தியாவை பாஜக தங்கள் கட்சிக்குள் இழுக்க திட்டமிடும். தங்கள் கட்சியில் சேர்த்து அவருக்கு மத்திய பிரதேச முதல்வர் பதவி வழங்குவதாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இல்லையென்றால் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    நேற்று பேசவில்லை

    நேற்று பேசவில்லை

    இது தொடர்பாகத்தான் நேற்று ஆலோசனை நடந்தது. இவரை தொடர்பு கொள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் இவரை காங்கிரஸ் கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில பாஜக மூத்த உறுப்பினர்கள் இவருடன் நேற்று வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக சிறிய கோஷ்டி மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    English summary
    Amit Shah held late night meeting, BJP may lure Jyotiraditya Scindia against Kamal Nath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X