For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமித்ஷா என்ன கடவுளா?.. அவரை யாரும் எதிர்க்கக் கூடாதா?.. மம்தா பானர்ஜி ஆவேசக் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Mamta slam Amit Shah: அமித்ஷாவை யாரும் எதிர்க்கக் கூடாதா?.. மம்தா கேள்வி- வீடியோ

    கொல்கத்தா: அமித்ஷா என்ன கடவுளா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    கொல்கத்தாவில் நேற்றைய தினம் சாலை பிரசாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னெடுத்தார். அப்போது கொல்கத்தா பல்கலைக்கழகம் வழியாக அமித்ஷாவின் வாகனம் சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து அங்கிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் அந்த பல்கலைக்கழக வாயிலில் நின்று கொண்டு அமித்ஷாவே திரும்பி போ என பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கருப்பு கொடிகளையும் ஏந்தினர்.

    மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன? மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன?

    வாகனம்

    வாகனம்

    அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பினர் அந்த கருப்பு கொடிகளை மறைத்தபடியே அமித்ஷா மற்றும் மோடியின் போஸ்டர்கள் அடங்கிய பெரிய பேனரை காண்பித்தனர். இதையடுத்து அமித்ஷாவின் வாகனம் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்தது.

    வித்யாசாகர்

    வித்யாசாகர்

    உடனே பாஜக மாணவர் அமைப்பினருக்கும் திரிணமூல் கட்சியின் மாணவரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே மற்றொரு கல்லூரியான ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்லூரியில் பாஜகவினர் நுழைந்து சூறையாடினர்.

    பாரம்பரியம்

    பாரம்பரியம்

    இந்த மோதலில் வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மோதல் நடந்த இடங்களை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா.

    கடவுளா

    கடவுளா

    இந்த பல்கலைக்கழகத்தில் எத்தனை பெரிய பிரபலங்கள் படித்தனர் என தெரியுமா. இதுபோன்ற தாக்குதல் நடத்தியதற்கு அவர் வெட்கப்பட வேண்டும். யாரும் அவரை எதிர்த்து போராட்டம் நடத்த கூடாது என சொல்வதற்கு அவர் என்ன கடவுளா.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    தேர்தலில் கணக்கில் வராத பணத்தை பாஜகவினர் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. சாலைகளில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் எத்தனை பெரிய கட்அவுட்களை வைத்துள்ளனர். ஏன் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Mamta Banerjee asks Is AmitShah a God so that no one can protest against him?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X