For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோனியை சந்தித்த அமித் ஷா.. லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறாரா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தோனியை சந்தித்த அமித் ஷா- வீடியோ

    டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து இருக்கிறார்.

    பாஜக கட்சி இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். மக்களை எப்படி எல்லாம் கவரலாம் என்று திட்டமிட்டு பாஜக வேகமாக உழைத்து வருகிறது.

    இந்த முறை மோடி பெயரை மட்டும் சொல்லி வாக்கு கேட்காமல், மற்ற சிலரை வைத்தும் வாக்கும் கேட்கும் எண்ணத்தில் பாஜக இருக்கிறது. இதற்காக பிரபலங்களின் துணையை நாடியுள்ளது பாஜக.

    திட்டம்

    திட்டம்

    வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா, இந்திய பிரபலங்களின் உதவியை நாடியுள்ளார். இதற்காக 1 லட்சம் பிரபலங்களை பல்வேறு துறைகளில் இருந்து பாஜகவிற்கு ஆதரவாக பேச வைக்க இருக்கிறார்கள். கிரிக்கெட், சினிமா, வர்த்தகம் என எல்லா துறையிலும் இதற்காக பாஜக உதவியை கோர இருக்கிறது.

    தமிழ்நாட்டில் என்ன

    தமிழ்நாட்டில் என்ன

    அதேபோல் தமிழ்நாட்டிலும் இந்த பணி வேகமாக நடந்து வருகிறது. பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு பிரபலங்களை சென்று நேரில் சந்தித்து பேசி வருகிறார். தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோரை சந்தித்தனர். இன்னும் சில பிரபலங்களை சந்திக்க உள்ளனர்.

    தோனி சந்திப்பு

    தோனி சந்திப்பு

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் அவருடன் இருந்தார். 4 வருட பாஜக ஆட்சி குறித்து இதில் தோனியிடம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது.

    பிரச்சாரம் செய்கிறாரா?

    பிரச்சாரம் செய்கிறாரா?

    இந்த சந்திப்பில் தோனியை நாடாளுமன்ற தேர்தலுக்காக, அமித் ஷா பிரச்சாரம் செய்ய அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தோனி என்ன மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளார் என்று விவரம் வெளியாகவில்லை. மேலும் இன்னும் சில கிரிக்கெட் வீரர்களை பாஜக தலைவர்கள் விரைவில் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Amit Shah meets Dhoni, will meet few more personalities soon for their Lokpal election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X