For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீண்ட கூடாத இடத்தில் கை வைத்துவிட்டார் அமித் ஷா.. சும்மா விட மாட்டேன்.. பொங்கும் மமதா!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொடக்கூடாத இடத்தில் கை வைத்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Mamta slam Amit Shah: அமித்ஷாவை யாரும் எதிர்க்கக் கூடாதா?.. மம்தா கேள்வி- வீடியோ

    கொல்கத்தா: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொடக்கூடாத இடத்தில் கை வைத்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.

    நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் இந்த பேரணியை ஏற்பாடு செய்து இருந்தார்.

    ஆனால் நேற்று இந்த பேரணியில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி பெரிய கலவரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தம்பிக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவி! கொலிஜியம் பரிந்துரையால் சர்ச்சை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தம்பிக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவி! கொலிஜியம் பரிந்துரையால் சர்ச்சை

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி வாசலில்தான் இந்த கலவரம் நடந்தது. அதன் வழியாக பேரணி சென்ற அமித் ஷாவின் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸ் மிகவும் குறைவாக இருந்ததால் இந்த சலசலப்பு பெரிய கலவரத்தில் முடிந்தது.

    உடைத்தனர்

    உடைத்தனர்

    இந்த கலவரத்திற்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். அதோடு ஈஸ்வர் சந்திரா வித்யாசகரின் சிலையை அடித்து உடைத்தனர். ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர். தமிழகத்தில் பெரியாருக்கு இணையாக பார்க்கப்படும் மறுமலர்ச்சி தலைவர் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர்.

    என்ன செய்தார்

    என்ன செய்தார்

    இதனால் கடும் கோபம் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று இரவே ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர்கல்லூரிக்கு சென்று அங்கிருந்த மாணவர்களிடம் உரையாடினார். அதேபோல் அங்கு உடைக்கப்பட்ட சிலைகளை பார்த்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். மாணவர்கள் இழந்த பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பேசினார்.

    சொன்னது என்ன

    சொன்னது என்ன

    அதன்பின் மாணவர்களிடம் பேசிய மமதா, அமித் ஷா தொடக்கூடாத இடத்தில் கை வைத்துவிட்டார். வித்யாசாகர் சிலை மீது அவர்கள் கை வைத்துவிட்டார்கள். தவறு செய்த ஒருவரையும் விட மாட்டேன். இந்த செயலை செய்தவர்களை சும்மா விட மாட்டேன். அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறேன் என்று மமதா கூறியுள்ளார்.

    என்ன பேரணி

    என்ன பேரணி

    இந்த நிலையில் இதற்கு எதிராக மமதா பானர்ஜி தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிராக மமதா பானர்ஜி தலைமையில் பெரிய பேரணி நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Amit Shah shouldn't touch our feeling, He will pay for this says West Bengal CM Mamata.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X