For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

22-ம் தேதி காலை 10 மணிக்கு அமித்ஷா ஆஜராக வேண்டும்.. மம்தா மருமகனின் வழக்கில் கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும். மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எப்படியும் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும். தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

Amit Shah Summoned By Bengal Court After Mamata Banerjees Nephew Sues Him

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக உள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி அவதூறு பரப்பு வகையில் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு அமித் ஷா நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அவரது வக்கீல் மூலமாக அஜராகலாம் என நீதிபதி தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளார்.

English summary
A designated MP/MLA court in West Bengal issued summons to Union Home Minister Amit Shah today to appear either personally or through a lawyer before it on February 22 in connection with a defamation case filed against him by Trinamool Congress MP Abhishek Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X