For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரலில் வரப்போகுது முக்கிய அறிவிப்பு.. அதிரடி காட்டப்போகும் அமித்ஷா! சிஏஏ விதிமுறைகள் குறித்து!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாஜகவின் மேற்கு வங்க தலைவர்கள் சந்தித்து பேசினர். அவர்கள் சொன்ன தகவலின்படி புதிய குடியுரிமைச் சட்டத்தின் விதிகளை ஏப்ரல் மாதத்தில் பாஜக அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில். அந்த சட்டத்தின்படி விதிகளை அரசு வெளியிட தயாராகி வருவதாக தெரிகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் ஒரு தரப்பு மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்கிற அச்சம் இருப்பதால் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசோ இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்தவர்களுக்கே பாதிப்பும், இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் உறுதி அளித்துள்ளது.

வரைவு அறிக்கை

வரைவு அறிக்கை

இந்நிலையில் சிஏஏ வரைவு விதிகளை மத்திய உள்துறை அமைச்ர் அமித்ஷா தயார் நிலையில் வைத்துள்ளாராம். புதிய குடியுரிமைச் சட்டத்தின் விதிகளை ஏப்ரல் மாதத்தில் பாஜக அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளதாம். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பாஜக-ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் கருத்துக்காக அவர் ஒரு மாதம் காத்திருக்க விரும்புவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

காத்திக்கும் மக்கள்

காத்திக்கும் மக்கள்

இதனிடையே மேற்கு வங்காளத்தில் சிஏஏ விதிமுறைகள் மிக முக்கியமானதாகும். ஏனெனில் அங்குதான் ஏராளமான அகதிகள் சில விஷயங்களை தெளிவுபடுத்த CAA விதிகளுக்காக காத்திருக்கிறார்கள். உதாரணமாக, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ஆரம்ப ஆண்டுகளில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்காளத்திற்கு வந்த அகதிகளின் குடும்பங்கள் மீண்டும் CAA இன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

1960பிறந்தவர் கேள்வி

1960பிறந்தவர் கேள்வி

பெலியகட்டாவைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் அபருப் முகர்ஜி இது பற்றி கூறுகையில். "எனது தந்தை கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்து 1952 இல் கொல்கத்தாவில் குடியேறினார். அவர் 2005 இல் இறந்தார். நான் 1960 ல் கொல்கத்தாவில் பிறந்தேன். நான் CAA இன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பினார். இதேபோல் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன.

யாருக்கு பொருந்தாது

யாருக்கு பொருந்தாது

சிஏஏ சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து 2014 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு பொருந்தும். "ஆனால் CAA சட்டத்தின் ஆரம்ப தேதி குறித்து தெளிவாக இல்லை. இதனால் தான் இங்கே குழப்பமே ஏற்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மோலோய் தாஸ் இது பற்றி கூறுகையில், . CAA இன் படி, 1971 மார்ச் 25 க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தவர்கள் குடிமக்கள் என்று இந்திய அரசு ஏற்கனவே அறிவித்திருப்பதால், அதற்கு பின் வந்த அனைத்து அகதிகளும் விண்ணப்பிக்க வேண்டியது வரும்.

2004பின் பிறந்தவர்கள்

2004பின் பிறந்தவர்கள்

ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, 1950 முதல் ஜூலை 1, 1987 வரை இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றோர் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் பிறப்பால் குடிமக்கள். எனவே "ஜூலை 1, 1987 க்குப் பிறகு பிறந்தவர்கள் பெற்றோர்களில் ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். இருப்பினும், தற்போதுள்ள விதிகள் டிசம்பர் 30, 2004 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு கடினமானவை. இந்த இளம் வயதினர் இந்திய குடிமக்களான பெற்றோரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 2003-04ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது வாஜ்பாய் அரசாங்கம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது" என்றார்.

பாஜக தலைவர் ஒப்புதல்

பாஜக தலைவர் ஒப்புதல்

இதனிடையே புதிய சட்டத்தில் குழப்பம் இருப்பதாக மேற்கு வங்க மாநில பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு ஒப்புக்கொண்டார். "குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். விண்ணப்பம் செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டுமா என்று அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்தியாவுக்குள் நுழைந்த தேதி மற்றும் அவர்கள் வந்த இடத்தைக் குறிப்பிடும் ஒரு சுய அறிவிப்பு போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம். அவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தையும் செய்யலாம். CAA விதிகள் வெளியிடப்படும் போது மற்ற கேள்விகள் தெளிவாக இருக்கும்," என்றார்.

English summary
Amit shah waits for feedback, The framing of rules of the new citizenship law is likely to be in place in April,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X