For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாத்தா.. இந்த தொப்பி வேணாம்.. ஆஹா.. அமித் ஷா பேத்திக்கு கூட பாஜக கலர் பிடிக்கலையே!

Google Oneindia Tamil News

காந்திநகர்: ஒன்னுல்ல.. ரெண்டு இல்ல.. 3 முறையும் தன் தலையிலிருந்த பாஜக தொப்பியை தூக்கி போட்டுவிட்டது அமித்ஷாவின் பேத்தி.. இதுதான் இன்னைக்கு நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிட போகிறார். அதுவும் குஜராத்தில் உள்ள அத்வானியின் காந்திநகர் தொகுதியில் களம்காண உள்ளார். இதற்காக இன்று அகமதாபாத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக ஒரு பேரணியும் ஏற்பாடாகி இருந்தது. இதில் கலந்து கொண்டுவிட்டு, அதற்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதாக கூறப்பட்டது.

இந்த டிரஸ்ஸோடு உள்ளே வராதே .. ஸொமாட்டோ டெலிவரி பாயை விரட்டிய மால் ஊழியர்கள்.. வைரல் வீடியோ இந்த டிரஸ்ஸோடு உள்ளே வராதே .. ஸொமாட்டோ டெலிவரி பாயை விரட்டிய மால் ஊழியர்கள்.. வைரல் வீடியோ

அமித்ஷா குடும்பம்

அமித்ஷா குடும்பம்

இதற்காக அகமதாபாத் நகருக்கு அமித்ஷா வந்தார். அவரை வரவேற்பதற்காக பாஜக தொண்டர்கள் திரண்டிருந்தார்கள். அதேபோல, அமித்ஷாவின் குடும்பமும் ஒரு பக்கம் காத்திருந்தனர். குடும்ப உறுப்பினர்களில் அமித்ஷாவின் பேத்தியும் அடக்கம்!

ஃபேன்சி தொப்பி

ஃபேன்சி தொப்பி

இந்த குழந்தையை ஒருவர் தூக்கி வைத்து கொண்டிருந்தார். பேத்தியை பார்த்ததும் அமித்ஷா அருகில் வந்தார். வெயில் என்பதால் குழந்தையின் தலையில் ஒரு தொப்பி போடப்பட்டு இருந்தது. அது ஒரு சாதாரண ஃபேன்சி தொப்பி போல இருந்தது.

தாமரை சின்னம்

தாமரை சின்னம்

உடனே அமித்ஷா அந்த தொப்பியை கழற்றிவிட்டு, பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த தொப்பியை பேத்திக்கு அணிவித்தார். ஆனால் அந்த குழந்தையோ அமித் ஷா அணிவித்த பாஜக தொப்பியை அணிய மறுத்தது. அதனால் தலையில் வைத்த தொப்பியை கழற்றிவிட்டது.

பாஜக தொப்பி

பாஜக தொப்பி

திரும்பவும் அமித்ஷா பாஜக தொப்பியை குழந்தை தலையில் வைத்தார். ஆனால் குழந்தை கழற்றியது. இப்படியே 3 முறையும் அந்த பாஜக தொப்பியை கழற்றிவிட்டது குழந்தை.

தொப்பி பிடிக்கல

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே போட்டிருந்த ஃபேன்சி தொப்பியை எடுத்து தானே தலையில் போட்டு கொண்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அமித் ஷாவின் பேத்திக்கே பாஜகவின் தொப்பி பிடிக்கவில்லை என்பது உட்பட இதற்கு கமெண்ட்டுகளும் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.

English summary
BJP Leader Amit Shah's grand daughter has refused to wear BJP hat in Gandhi Nagar Rally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X