For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் "சாணக்கியன்".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?

Google Oneindia Tamil News

குவாஹாட்டி: மேற்கு வங்கத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாமில் செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்பு இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித்ஷா நவீன சாணக்கியன் என அழைக்கப்படுகிறார். பாஜக தலைவராக இருந்த போதும் சரி எந்த மாநிலத்தில் எப்படி வெற்றியை குவிப்பது, யாரை வளைப்பது, யாரை ஓரங்கட்டுவது என அனைத்து விஷயங்களிலும் சாணக்கியன் போல் முடிவு எடுத்து செயல்படுத்தக் கூடியவர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போல் சொற்ப அளவில் மாநிலத்தை ஆட்சி செய்யும் பெரும்பான்மையை கோட்டை விட்டால் எப்படியாவது எதிரணியை சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் மூலம் அந்த அணியிலிருந்து சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க செய்கிறார் என அமித்ஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.... மாறிமாறி விமர்சித்துக்கொள்ளும் பாஜக, திரிணாமுல் காங்.எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.... மாறிமாறி விமர்சித்துக்கொள்ளும் பாஜக, திரிணாமுல் காங்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

இந்த நிலையில் கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படித்தான் பாஜக ஆட்சியை பிடித்ததாக சொல்லப்படுகிறது. அது போல் மகாராஷ்டிராவிலும், ராஜஸ்தானிலும் ஒரு கலகத்தை ஏற்படுத்த முயன்று அது தோல்வியில் முடிந்துவிட்டது. மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அண்டைய மாநிலம்

அண்டைய மாநிலம்

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த அமித்ஷா சென்றிருந்தார். அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி பாஜக பக்கம் சாய்ந்தார். இன்னும் சில எம்எல்ஏக்களும் பாஜக இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் மேற்கு வங்கத்திற்கு அண்டைய மாநிலமான அஸ்ஸாமிற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்றார்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

அவரை குவாஹாட்டி விமான நிலையத்தில் முதல்வர் சர்பானந்த சோனோவால் வரவேற்றார். புதிய மருத்துவக் கல்லூரி, 9 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட செல்கிறார். அப்படியே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

இரு மூத்த தலைவர்கள்

இரு மூத்த தலைவர்கள்

குறைந்தது இரு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. இப்படியாக செல்லும் மாநிலங்களில் எல்லாம் அதிருப்தியாளர்களை வாரி சுருட்டுகிறது பாஜக என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

English summary
Amitshah starts elections campaign in Assam Today. Two Congress leaders are expected to be join in BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X