For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்!

மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் என் தலையை வெட்டிக்கொள்ளுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மீட்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் என் தலையை வெட்டிக்கொள்ளுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Mamata Emotional Speech: ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்!

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கு விடமால் அங்கு மழை பெய்தது.

    இதனால் மேற்கு வங்கத்தில் மிக மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 வருடத்தில் அங்கு ஏற்படாத பொருளாதார பாதிப்பும் சேதமும் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்பன் புயலுடன் சேர்த்து அங்கு தற்போது கொரோனா பாதிப்பும் உள்ளது.

    இன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்?இன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்?

    மோசமான பாதிப்பு

    மோசமான பாதிப்பு

    இரண்டும் சேர்த்து அங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது. அதேபோல் அங்கு மாநிலம் சேதத்தில் இருந்து மீண்டும் வர பல வருடங்கள் ஆகும் என்று தெரிவிக்கிறார்கள். அங்கு மீட்பு பணிகள் மிக மெதுவாக நடந்து வருகிறது.

    ராணுவ உதவி

    ராணுவ உதவி

    கொரோனா காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் மீட்பு பணிகள் தாமதமாகி உள்ளது.இதனால் தற்போது அங்கு உதவிக்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசால் பணிகளை செய்ய முடியவில்லை என்பதால் அங்கு ராணுவம் களமிறங்கி உள்ளது. ஆனால் இன்னும் அங்கு பல மாவட்டங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை.

    மின்சாரா போராட்டம்

    மின்சாரா போராட்டம்

    கொல்கத்தாவில் கூட பல பகுதிகளில் மின்சாரம் இன்னும் வரவில்லை.புயல் மோசமாக பாதித்த வடக்கு 24 பரகான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கூட மின்சாரம் வரவில்லை. இதனால் அங்கெல்லாம் மிக மோசமாக மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் தற்போது போராட்டத்தில் குதிக்க தொடங்கி உள்ளனர். உடனே மீட்பு பணிகளை செய்யும்படியும், உடனே மின்சார வசதியை செய்து தரும்படியும் போராடி வருகிறார்கள்.

    தலையை வெட்டுங்கள்

    தலையை வெட்டுங்கள்

    இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். அதில், புயல் தாக்கி இரண்டு நாள்தான் ஆகிறது. வேகமாக மீட்பு பணிகளை செய்து வருகிறோம். இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறோம். முடிந்த அளவு பணிகளை செய்கிறோம். சீக்கிரம் இயல்பு நிலை திரும்பும். அப்படி இயல்பு நிலை திரும்பாது என்றால், என் தலையை நீங்கள் வெட்டிக்கொள்ளுங்கள் என்று மம்தா பானர்ஜி மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார் .

    English summary
    Amphan Storm: Cut off my head says Mamata Banerjee to protesters in West Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X