For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்டவுனால் வந்த சிக்கல்.. அம்பன் புயல் வேகம் அதிகரிக்க இப்படி ஒரு காரணமா?.. சூப்பர் புயலின் பின்னணி

அம்பன் புயல் இப்படி வேகம் எடுக்க லாக்டவுன் ஒரு காரணம் என்று புவனேஷ்வர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: அம்பன் புயல் இப்படி வேகம் எடுக்க லாக்டவுன் ஒரு காரணம் என்று புவனேஷ்வர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அம்பன் புயல் தற்போது மேற்கு வங்கத்தை நெருங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் இருந்து 170 கிமீ தூரத்தில்தான் வங்க கடலில் அம்பன் புயல் உள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கிறது.

இதனால் பெரிய அளவில் மேற்கு வங்கத்தில் சேதங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே ஆம்பன் புயல் கரையை கடக்கிறது.

ஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி ஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி

வேகம் அதிகம்

வேகம் அதிகம்

அம்பன் புயல் வேகம் அதிகரிக்க முக்கியமான காரணமாக கடலின் வெப்பநிலை கூறப்படுகிறது. வங்க கடலில் வெப்பநிலை அதிகரித்த காரணத்தால்தான் அம்பன் புயல் வேகம் அதிகரித்து இருக்கிறது. வங்க கடலில் வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் புயலின் வேகம் அதிகரித்து அது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது 220 கிமீ/ நேரம் என்ற வேகத்தில் பரவி வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த நிலையில் அம்பன் புயல் இப்படி வேகம் எடுக்க லாக்டவுன் ஒரு காரணம் என்று ஐஐடி கூறியுள்ளது.
புவனேஷ்வர் ஐஐடியல் பணியாற்றும் கடல் மற்றும் வானிலை ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் வி வினோஜ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பன் புயலின் வேகம் அதிகரிக்க கடலின் வெப்பநிலைதான் காரணம். இதற்கு லாக்டவுன் ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது.

லாக்டவுன் சிக்கல்

லாக்டவுன் சிக்கல்

பொதுவாக வாகனங்கள் அதிகமாக இயங்கும் போது புழுதி உருவாகும், புகை மண்டலம் உருவாகும். இது சூரிய கதிர்களை பூமியில் பட விடாமல் திருப்பி எதிரொலிக்கும். கருமையான மேக மூட்டங்கள் உருவாகி சூரியனின் வெப்பநிலையை குறைக்கும். பொதுவாக இது போன்ற மேகங்கள் இந்தியாவில் வங்க கடல் மேல்தான் அதிகமாக இருக்கும். இதனால் கடல் மேல் படும் வெப்பம் குறையும். ஆனால் தற்போது லாக்டவுனால் இந்த கருமேகங்கள் குறைந்துள்ளது.

குறைவான மாசு

குறைவான மாசு

இதனால் சூரியனின் கதிர்கள் நேரடியாக கடல் மேல் விழுகிறது. இதனால் வங்க கடல் பகுதியில் வெப்பநிலை திடீர் என்று அதிகரித்துள்ளது . இதுதான் புயலின் வலிமை அதிகமாக காரணம். வங்க கடலில் லாக்டவுனுக்கு பிறகு 1-3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து உள்ளது. இதை இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதன் மூலம் முக்கியமான விஷயங்கள் தெரிய வரும், என்று வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Amphan Storm: Lockdown also played a major role in increasing cyclone speed in Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X