For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ என்ற சத்தம்.. பேய் வேகம்.. ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டி எடுத்த ஆம்பன் புயல்.. அதிர வைத்த வீடியோ

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் என்ன நிலை ஏற்பட்டுள்ளது எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது என்று வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    Cyclone Amphan Live : Landfall begins in Bengal, likely to go on for 4 hrs

    ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்து வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் வலு அடைந்து கொண்டே செல்கிறது. 160 கிமீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மிக தீவிரமாக உருவெடுத்துள்ளது.

    ஆம்பன் புயல் காரணமாக தற்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது.

     கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது ஆம்பன் புயல் கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது ஆம்பன் புயல்

    ஒடிசா நிலை

    இந்த புயல் காரணமாக ஒடிசா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு இருக்கும் பரதீப் பகுதிகள் இதனால் மிக அதிக அளவில் மழை பெய்தது. மழையோடு சேர்த்து மிக அதிகமாக காற்றும் வீசியது. அங்கு புயல் வீசியது தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஓ என்ற சத்தம்

    ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட கொடும் சத்தம். ஓ என்ற சத்தம் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இந்த புயல் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் சத்தம் ஏற்பட்டுள்ளது.

    கொல்கத்தா நிலை

    கொல்கத்தாவில் இந்த புயல் இன்னும் முழுமையாக தாக்கவில்லை. ஆனால் தற்போது புயல் கடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அங்கு இதனால் கடுமையான மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

    கிராமங்களின் நிலை

    இந்த புயல் காரணமாக ஒடிசாவும், மேற்கு வங்கமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராம பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பரகான்ஸ், தெற்கு 24 பரகான்ஸ், சுந்தர்பன் ஆகிய பகுதிகளில் இந்த புயலால் கடுமையான பாதிப்புகள் இருக்கும் என்கிறார்கள். இந்த புயல் 20 வருடங்களில் இல்லாத சேதத்தை உண்டாக்கும்.

    என்ன வேகம்

    முதலில் சூப்பர் புயலாக இருந்த இந்த புயல் நேற்று அதி தீவிர புயலாக வலிமை இழந்தது. தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கண் பகுதியை கரையை கடக்கும் போது 180 கிமீ வேகத்தை அடைய வாய்ப்புள்ளது. தற்போது 160 கிமீ வேகத்தில் இருக்கும் புயலை போக போக வேகம் குறையும். பல்வேறு இடங்களில் இதனால் மரங்கள் விழுந்துள்ளது.

    கண்கொள்ள காட்சி

    ஆம்பன் புயல் காரணமாக பட்டாநகரில் ஏற்பட்டது இருக்கும் கண்கொள்ளா காட்சி. அங்கு மேகங்கள் திரண்டு நிற்கிறது. இன்று இரவு அங்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

    English summary
    Amphan Storm makes landfall in West Bengal: Video from netizens in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X