For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடமிட்டவர் ரயிலில் சிக்கி பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    பஞ்சாப் தசரா விழாவில் ரயில் கோர விபத்து, நடந்தது என்ன?- வீடியோ

    அமிர்தசரஸ்: பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடத்தில் நடித்த தல்பீர் சிங் ரயில் மோதி இறந்தார்.

    பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர்.

    Amritsar man who played Ravana died trying to save people

    இன்னொரு பக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது பெரிய பெரிய தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி ஓடியபோது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோரா பதாகில் ரயில்வே டிராக் அருகே நின்று கொண்டு ஏராளமானோர் தசரா விழாவையும் வாண வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    [திண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்]

    ராவணன் வேடமிட்டவர் தல்பீர் சிங். இவர் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பட்டாசு வெடிப்பதை பார்ப்பதற்காக ஜோதா பதாக் நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததை கவனித்த தல்பீர் சிங், ரயில் வருவதை கண்டு கூச்சலிட்டார்.

    அதற்குள் அவர் ரயிலில் சிக்கி பலியாகிவிட்டார். விபத்தில் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் குரல் கொடுத்த தல்பீர் சிங்குக்கு மனைவியும் 8 மாதக் குழந்தையும் உள்ளனர்.

    தல்பீர் சிங்கின் தாய், தனது மருமகளுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தல்பீரின் தாய் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக சுற்றியுள்ள கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்துக்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜோரா பதாக் பகுதியில் கூடி விழாவை பார்வையிடுவது வழக்கம் என்றார். அப்போது மனைவி கண்கலங்கினார்.

    English summary
    Dalbir Singh, who played Ravana in Ramleela, died in Amritsar train accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X