For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமுல் நிறுவன மேலாண் இயக்குநராக சேலத்தை சேர்ந்த ரத்னம் நியமனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Amul appoints K Rathnam as managing director
வதோதரா: நாட்டின் மிகப்பெரிய பால் உற்பத்தி அமைப்பான அமுல் டெய்ரிக்கு தமிழரான கே.ரத்னம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருவது கய்ரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் லிமிட்டெட். நாட்டில் பெரும்பான்மையோருக்கு அமுல் டெய்ரி என்ற பெயரிலேயே இந்த சங்கம் அறிகமுகமாகியுள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தின்பண்டங்கள் தயாரிப்பில் முன்னணியிலுள்ள அமுல் டெய்ரி மேலாண் இயக்குநராக கே.ரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமுல் எம்.டியாக இருந்த ராகுல்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான பிரான்சின், 'லீ குருப் லேக்டலிஸ்' (திருமலா) இந்தியாவில் மேற்கொள்ளும் வர்த்தக விரிவாக்க பணிக்கு சென்றுவிட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் ரத்னம் மேலாண் இயக்குநர்-பொறுப்பு என்ற பதவியில் இருந்தார். இப்போது அவரே மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரத்னம், பட்டப்படிப்பை கோவையில் முடித்தார். 1995ம் ஆண்டு துணை மேலாளராக (உற்பத்தி பெருக்கம்) அமுல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்து சுமார் 20 ஆண்டுகளில் அதன் மேலாண் இயக்குனராக பதவி உயர்வை பெற்றுள்ளார்.

English summary
Amul Dairy has appointed K Rathnam as managing director of the co-operative union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X