• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அய்யய்ய.. இதற்கு பெயரா வரன் பொருத்தம்? நாடு முழுக்க புயலை கிளப்பிய பெங்களூர் மேட்ரிமோனி விளம்பரம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News
  நாடு முழுக்க புயலை கிளப்பிய பெங்களூர் மேட்ரிமோனி விளம்பரம்!- வீடியோ

  பெங்களூர்: பெங்களூரில் திருமண வரன்கள் சந்திப்பு ( matrimony meet) நிகழ்ச்சியொன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

  இந்தியாவில் திருமணம் என்பது சொர்க்கத்தில் மட்டுமல்ல ரொக்கத்திலும் நிர்ணயிக்கப்படுவது. 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சந்தையாக மாறியுள்ளது இந்திய திருமணங்கள்.

  திருமணத்தை ஆடம்பரமாக்கியதன் விளைவு, அது இப்போது வர்த்தகமாக மாறியுள்ளது. உறவினர்களை விட்டு விலகிச் செல்லும் இன்றைய தலைமுறை, திருமண நேரத்தில் நம்புவது matrimony எனப்படும் வரன் பார்த்து கொடுக்கும் நிறுவனங்களைத்தான்.

  பெரும் சந்தை

  பெரும் சந்தை

  கல்யாண மாலை உட்பட பல்வேறு பெயர்களில், பல்வேறு மாநிலங்களிலும், வரன் பார்த்து கொடுக்கும் நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் இப்போது தரம் பிரித்தும் நடத்தப்படுகின்றது. டாக்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என தொழிலுக்கு தக்கபடியும், ஜாதிக்கும், மதத்திற்கும் தக்கபடியும் தனித்தனியாக மேட்ரிமோனி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொழிலுக்கு ஏற்ப நல்ல கமிஷன் தொகை வரன் பார்த்து கொடுக்கும் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.

  பெங்களூர் வரன் அமைப்பு

  பெங்களூர் வரன் அமைப்பு

  இப்படித்தான், பெங்களூரில் young achievers என்ற அமைப்பு வரன்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 12ம் தேதி, லீலா பேலஸ் என்ற பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறும் என நேற்றைய, 'தி ஹிந்து' ஆங்கில பதிப்பின் முதல்பக்கத்தில், கால் பக்கத்திற்கு விளம்பரம் செய்திருந்தது. இதில் பங்கேற்க நிபந்தனைகளும் உண்டு.

  பணக்காரர்கள், படித்தவர்கள்

  பணக்காரர்கள், படித்தவர்கள்

  இதில் பங்கேற்பவர்கள் ஒன்று பெரிய பணக்காரர்களாக இருக்க வேண்டும் (ultra rich families) அல்லது, உயர் பதவிகளில் இருக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சார்டர்ட் அக்கவுண்டுகள், ஐஐடி அல்லது ஐஐஎம்மில் படித்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை young achieverகள் என வகைப்படுத்தியிருந்தது அந்த விளம்பரம். அதில், அழகான பெண்கள் என்ற வரியும் சேர்க்கப்பட்டிருந்தது.

  அழகு ஒரு சாதனையாம்

  அதாவது இப்படி படித்து பெரியாட்களாக உருவாகியவர்கள், உழைத்து செல்வம் ஈட்டியவர்கள் எப்படி சாதனையாளர்களோ, அப்படித்தான் அழகான பெண்களும் சாதனையாளர்களாம். அழகு இல்லாத (அழகு என்பது, பார்வையை பொருத்து மாறுபடும் என்பது வேறு விஷயம்) பெண்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்ற பொருள் அந்த விளம்பரத்தில் தொனித்தது. இது தேசிய அளவில் சோஷியல் மீடியாவில் கடும் கண்டனங்களுக்கு காரணமானது.

  வெஜிட்டேரியன் சாப்பாடு

  வெஜிட்டேரியன் சாப்பாடு

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும், இளம் சாதனையாளர்கள் (அவர்கள் கருத்துப்படி, அழகான பெண்கள் உட்பட), நுழைவு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டுமாம். செல்வந்தர் குடும்பத்தினர் ரூ.25,000 செலுத்த வேண்டுமாம். மதியம் சைவ உணவு வழங்கப்படுமாம். நாடு முழுக்க இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீராம், நிகழ்ச்சியையே ரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்.

  விளக்கம்

  விளக்கம்

  ஆந்திராவை சேர்ந்த அவர் இதுபற்றி கூறுகையில், எங்கள் வரன் நிறுவனம் 6 மாதங்கள் முன்பு துவங்கப்பட்டது. டாக்டர்கள் வரன் சந்திப்பு நடத்தியிருந்தோம். 300 பேர் பங்கேற்றனர். அதில் ஒரு டென்டிஸ்ட் டாக்டர் தனது இன்ஜினியரிங் படித்த மகளையும் அழைத்து வரலாமா என கேட்டார். நாங்கள் மறுத்தோம். அவர்தான், அடுத்தமுறை, அழகான பெண்களுக்கும் அனுமதி என்று சொல்லுங்களேன். எனது மகள் அழகி போட்டியில் வென்றவர் என கேஷுவலாக கூறினார். அவர் கூறியது மனதில் பதிவாகியிருந்ததால் இம்முறை அழகான பெண்கள் என்றும் விளம்பரத்தில் சேர்த்தேன். ஆனால் அதை சாதனையாளர்கள் பட்டியலின் கீழ் சேர்த்தது தப்புதான். நாடு முழுக்க இது விவாதமாகிவிட்டதால் எங்கள் நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே நிகழ்ச்சியையே ரத்து செய்ய உள்ளேன் என்றார் அவர்.

  English summary
  An ad for a Bengaluru matrimony meet went viral on Wednesday for calling beauty is an achievement.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X