For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நபர்...போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

டெல்லியில் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய நபரை போலீசார் வித்தியாசமான முறையில் பிடித்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய நபரை போலீசார் வித்தியாசமான முறையில் பிடித்துள்ளனர். இவர் மிகவும் முக்கியமான குற்றவாளி ஆவார்.

பல விதமான வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர் போலீசில் கண்களில் படாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தற்போது இவரை போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர்.

இவருடன் சேர்த்து இவரின் நண்பர்களும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததது குறிப்பிடத்தக்கது. இவரது பிரதான தொழில் திருடுவது ஆகும்.

 பிரபல திருடன் குணால்

பிரபல திருடன் குணால்

டெல்லியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த மிக முக்கியமான குற்றவாளிகளில் ஒருவர் குணால். பல காலமாக திருட்டு தொழில் ஈடுபட்டு வந்த இவர் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. இதுவரை பல்வேறு நீதிமன்றங்களில் இவர் மீது மட்டும் 62 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் திருடுவதை தன்னுடைய வழக்கமான செயலாக இவர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்

இந்த நிலையில் இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்ததால் அதில் இருந்து தப்பிப்பதற்காக முகத்தை மாற்றிக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக அதிக அளவில் செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதன் காரணமாக இவரது மொத்த முக அமைப்பே மாறி இருக்கிறது. மேலும் இவர் ஆளே அடையாளம் தெரியாமல் ஆகியுள்ளார். 4 வருடங்களுக்கு முன் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை அடுத்து யாருக்கும் தெரியாமல் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து இருக்கிறார்.

 போலீஸ் எப்படி கண்டுபிடித்தது

போலீஸ் எப்படி கண்டுபிடித்தது

இதையடுத்து இவரை கண்டுபிடிப்பதற்காக மிகவும் முயற்சி செய்த போலீஸ் அவரது நபர்களின் மூலமாக குணால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தகவல் கண்டுபிடித்தனர். மேலும் குணாலுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கின்றனர். இதையடுத்து போலீஸ் அவரது புதிய புகைப்படத்தை வைத்து அவரை தேடியது. புதிய படம் கிடைத்த ஒரே வாரத்தில் அவரை போலீஸ் கண்டுபிடித்தது.

 திருட்டுக்கு வித்தியாசமான காரணம்

திருட்டுக்கு வித்தியாசமான காரணம்

குணாலை கைது செய்த போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பைக், கார் திருடியது எல்லாம் தன்னுடைய கேர்ள் பிரண்டுக்கு செலவு செய்வதற்காக மட்டுமே என்று கூறியுள்ளார். வெளியில் அவருடன் சுற்ற பணம் தேவைப்பட்டதால் அப்படி செய்ததாக கூறியுள்ளார். போலீசார் அவர் எங்கு பிளாஸ்டிங் சர்ஜரி செய்தார் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை.

English summary
An auto thief in Delhi had undergone plastic surgery about 4 years ago to escape from police arrest. He said that he used all the illegal money to bear expenses of his girlfriends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X