For Daily Alerts
Just In
நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3 ஆக பதிவு
நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிக்கோபார் தீவுகளில் உள்ள கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை.

அதிகாலை 6.36 மணிக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.3 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதேபோல் உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.