For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்கள் முதல் சீனா வரை அதிர்வு.. மக்கள் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்ள மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். மணிப்பூரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா அச்சம் பரவி வருகிறது. அதேசமயம் இன்னொரு பக்கம் இயற்கை சீற்றங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை கடந்த வாரம்தான் கடுமையாக ஆம்பன் புயல் தாக்கியது.

An earthquake of magnitude 5.5 on the Richter scale struck Manipur

அதேபோல் நாடு முழுக்க கடுமையான வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்ள மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். மணிப்பூரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உங்களால்தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது.. இந்தியா மீது பழிபோடும் நேபாளம்.. பின்னணியில் சீனா!உங்களால்தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது.. இந்தியா மீது பழிபோடும் நேபாளம்.. பின்னணியில் சீனா!

மொய்ராங் பகுதியில் இருந்து 15 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் அசாம், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சிக்கிம் பகுதியில் சீன எல்லையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

English summary
An earthquake of magnitude 5.5 on the Richter scale struck Manipur and some north east states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X