For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் ஊர்ந்து சென்ற யானை.. சிகிச்சை பலனின்றி பலி.. வனத்துறை வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி.. மனதை உருக்கும் வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது. அச்சமயம் யானை மீது ரயில் வேகமாக மோதியது. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது.

    சீனாவில் அதிவேக நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 36 பேர் சாவுசீனாவில் அதிவேக நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 36 பேர் சாவு

    தவழ்ந்து சென்ற யானை

    தவழ்ந்து சென்ற யானை

    இதில் யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது.

    கண்கலங்கிய பயணிகள்

    கண்கலங்கிய பயணிகள்

    பின்னர் ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர்.

    ரயில் போக்குவரத்து

    ரயில் போக்குவரத்து

    விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அன்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வனத்துறை

    வனத்துறை

    இந்த யானைக்கு உள்காயம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் வனத்துறையினர் மட்டுமல்லாது இதை கேள்விப்பட்ட ரயில் பயணிகளும் வேதனை அடைந்தனர்.

    English summary
    An Elephant dies after it was hit by train in West Bengal despite it gets medical treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X