For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வருட சீக்ரெட் ஆப்ரேஷன்.. பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி.. சிக்கியது எப்படி?

பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி கைது- வீடியோ

    டெல்லி: பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு
    இருக்கிறான்.

    இவன் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இயங்கி வந்த பிரமோஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளான். இவன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இவனை பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பிரமோஸ் குழுவிலேயே இப்படி ஒரு உளவாளி இருந்தது இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

    பொய்யான விவரங்கள் அளித்தான்

    பொய்யான விவரங்கள் அளித்தான்

    நிஷாந்த் அகர்வால் என்று இவன் தன்னுடைய பெயரை அளித்துள்ளான். அதேபோல் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று தன்னுடைய விவரங்களை அளித்து இருக்கிறான். இவன் படித்த கல்லூரி, ஊர், விவரம் என அனைத்தும் பொய்யானது என்ற கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    நான்கு வருடமாக ஸ்பை

    நான்கு வருடமாக ஸ்பை

    இவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். மூத்த இன்ஜினியராக இவன் பணியாற்றியதாக கூறப்படுகிறது. நான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை கூட இவன் தனது உளவு படையான ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.

    செய்தது என்ன

    செய்தது என்ன

    பிரமோஸ் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை தொழில்நுட்பம் ஆகும். இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவான குழந்தை ஆகும் இந்த பிரமோஸ். இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொள்ளையடிப்பதற்காக அந்த உளவாளி இங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. சில முக்கிய விவரங்களை கடந்த சில நாட்களாக அவன் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    எப்படி சிக்கினான்

    எப்படி சிக்கினான்

    முக்கியமான தகவல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பிரமோஸ் மஹாராஷ்டிரா யூனிட்டில் இருந்து கசிகிறது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்துள்ளது. இதையடுத்து நடந்த மறைமுக கண்காணிப்பில், இவன்தான் அந்த உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவனை தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    An ISI spy who was working in Brahmos for years has been arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X