For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!

பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் ரூபேஷ் குமார் வர்மா என்ற ஐடி பணியாளர், தன்னுடைய அலுவலகத்திற்கு குதிரையில் பயணித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!-வீடியோ

    பெங்களூர்: பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் குமார் வர்மா என்ற ஐடி பணியாளர், தன்னுடைய அலுவலகத்திற்கு குதிரையில் பயணித்து இருக்கிறார்.

    பெங்களூருக்கு ஐடி நிறுவனம், குளிர்ச்சியான மழை, ஸ்டார் அப் என்று பல பிரபலமான விஷயங்கள் இருந்தாலும், டிராபிக்கும் அதில் ஒன்று. அந்த அளவிற்கு பெங்களூரின் டிராபிக், உடலுக்குள் இருக்கும் செல்களை ஆட்டி படைக்கும்.

    பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு கூட செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டிய நேரம் எடுக்கும். இந்த டிராபிக் காரணமாக பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் செய்த காரியம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    தினமும் கஷ்டம்

    தினமும் கஷ்டம்

    பெங்களூரை சேர்ந்த ரூபேஷ் குமார் வர்மாதான் இந்த வைரல் ஐடியாவிற்கு சொந்தக்காரர். இண்டர்மிடியேட் சாலையில் இருக்கும் அலுவலகத்திற்கு இவர் தினமும் 25 கிலோமீட்டர் பைக்கில் சென்றுள்ளார். ஆனால் எல்லா நாளும் பைக்கில் சென்று கூட தாமதமாகி உள்ளது. இதனால் அலுவலகத்தில் அவருக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு ஏதாவது செய்ய நினைத்துள்ளார்.

    குதிரை

    குதிரை

    இதையடுத்து அவர் நேற்று குதிரையில் அலுவலகத்திற்கு வந்துள்ளார். திரும்பி செல்லும் போதும் அவர் குதிரையிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்காக 24 மணி நேரம் கல்யாணத்திற்கு பயன்படுத்தப்படும் குதிரையை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று அவர் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு சென்றதாக கூறியுள்ளார்.

    கடைசியாக

    கடைசியாக

    நேற்றுதான் அவர் அலுவலகத்திற்கு கடைசியாக சென்றுள்ளார். அவர் சொந்தமாக நிறுவனம் தொடங்க இருப்பதால், இப்போது பார்க்கும் வேலையை விட்டுள்ளார். இதனால் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க ரூபேஷ் இந்த காரியத்தை செய்துள்ளார். அதேபோல் இணையம் முழுக்க மனிதர் வைரல் ஆகியுள்ளார்.

    ஏன் இப்படி செய்தார்

    ஏன் இப்படி செய்தார்

    இதுகுறித்து பேட்டியளித்த ரூபேஷ் ''பெங்களூர் டிராபிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படி செய்தேன். பெங்களூர் அதிகமாக மாசடைந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். அதனால்தான் இப்படி செய்தேன். இணையத்தில் வைரலானது ஆச்சர்யமாக இருக்கிறது'' என்றுள்ளார்.

    English summary
    An IT worker named Roopesh Kumar Verma came to his office in Horse amidst heavy traffic. He said that, he got fed up with the traffic so that he took the new way come to office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X