For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் 18 லட்சம் முஸ்லீம் பெயர்கள் மாயம்.. அம்பலப்படுத்திய தொண்டு நிறுவனம்

கர்நாடகத்தில் வாக்காளர் பெயர் பட்டியலில் 18 லட்சம் முஸ்லிம் மக்களின் பெயர்கள் விடுபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

பெங்களூரு : கர்நாடக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 18 லட்சம் முஸ்லிம்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பதை தொண்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான தீவிர பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இறங்கியுள்ளன. இதனால் கர்நாடகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த சட்டசபைத் தேர்தலில் 2 கோடியே 51 லட்சத்து 79 ஆயிரத்து 219 ஆண்களும், 2 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரத்து 288 பெண்களும் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினமாக 4,552 பேர் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள்.

4.96 கோடி வாக்காளர்கள்

4.96 கோடி வாக்காளர்கள்

கர்நாடகத்தில் ஒட்டு மொத்தமாக 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 59 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கடந்த பிப்ரவரி 28ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் போது தெரிவித்தார். புதியதாக 15 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

16 தொகுதிகளில் 1.28 லட்சம்

16 தொகுதிகளில் 1.28 லட்சம்

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று புதிய வாக்காளர் பட்டியலின் மீது மேற்கொண்ட ஆய்வில், 18 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. வளர்ச்சிக் கொள்கைகள் மீதான ஆராய்ச்சி மற்றும் விவாத மையம் என்கிற அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி காலித் ஷாயிஃபுல்லா தெரிவிக்கையில், மொத்தம் 16 தொகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 1.28 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருக்கின்றன.

பட்டியலில் பதியாத மக்கள்

பட்டியலில் பதியாத மக்கள்

இதைக்கொண்டு கணக்கிடுகையில், 224 தொகுதிகளிலும் 18 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரை விடுபட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், 2018ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிவாஜிநகர் தொகுதியில், 18453 முஸ்லிம் குடும்பங்களில், 4.3% குடும்பங்களில் ஒருவர் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நடத்தப்பட்ட ஆய்வில் 8900 குடும்பங்களில் ஒருவர் மட்டுமே வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை இணைத்திருப்பது தெரியவந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பதிவு

வாக்காளர் பட்டியலில் பதிவு

இந்நிலையில், அந்த தொண்டு நிறுவனம் சார்பில், missingmuslimvoters.com என்கிற இணையதளமும், ஆண்ட்ராய்ட் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு இருக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், முஸ்லிம்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது.

English summary
An NGO has claimed that just before the crucial Karnataka assembly elections 2018, the names of 18 lakh Muslims has gone missing from the voters’ list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X