For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 11 லட்சம் விலையில் வீடுகள் கிடைக்கும்.. இந்தா கிளம்பிட்டாங்கல்ல

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுவரை காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால், அந்த நிலை மாறியுள்ளது. இந்த நிலையில்தான், போட்டோ ஷாப் செய்யப்பட்ட ஒரு 'எஸ்எம்எஸ்' வைரலாக சுற்றி வருகிறது.

An SMS over Kashmir goes viral in internet

அதில், காஷ்மீர் லால் சவுக்கில், 11.25 லட்சம் முதல் வீடுகள். குறைந்தபட்ச இருப்பே உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு, போன் நம்பர் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இதுபோன்ற விளம்பர எஸ்எம்எஸ்கள் வந்து பார்த்திருப்பீர்கள். இப்போது, காஷ்மீரிலும் அதுபோல ரியல் எஸ்டேட் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்று இந்த போட்டோ ஷாப் எஸ்எம்எஸ் கூறுகிறது.

பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது, காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை திருமணம் செய்தால், அவர்கள் காஷ்மீரின் குடியுரிமையை இழப்பார்கள், காஷ்மீர் சட்டசபை தங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றலாம். ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள் காஷ்மீரை கட்டுப்படுத்தாது போன்றவை, சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் இருந்த முக்கிய அம்சங்களாகும். சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், இனிமேல் அந்த ஷரத்துகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An SMS is being shared widely on Twitter, that apparently asks people to book your land in Kashmir since Kashmir 370 removed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X