For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆச்சர்யம் தரும் அந்தமான் தீவு அதிசய மனிதர்கள்- வீடியோ

    போர்ட் பிளேர்: வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம் என்றும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் டிஜிபி தீபேந்திர பதாக் தெரிவித்தார்.

    அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ் (26). இவர் கிறிஸ்துவ மத போதகர். இவர் வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார்.

    அம்பை எய்தினர்

    அம்பை எய்தினர்

    இதற்காக 7 மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பி செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை மதிக்காமல் ஜான் ஆலன் ஆதிவாசிகளை நோக்கி முன்னோக்கி சென்றுள்ளார். உடனே அவர் மீது அம்பை எய்து கொன்று கடற்கரை மண்ணில் புதைத்துவிட்டனர்.

    [ஜானின் உடலை மீட்க சென்ற போலீசார்.. அம்பு எய்தி ஓட விட்ட சென்டினல் ஆதிவாசிகள்.. திக் திக் நிமிடம்! ]

    பைனாகுலர்

    பைனாகுலர்

    இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தெரிவித்தனர். இந்நிலையில் ஜான் ஆலனின் உடலை மீட்க இந்திய அரசு போராடி வருகிறது. அவரது உடலை மீட்க போலீஸார் அடங்கிய படகு அந்த தீவுகளுக்கு 400 மீட்டர் தொலைவில் நின்று கொண்டு பைனாகுலர் மூலம் பார்த்தனர்.

    சிரமம்

    சிரமம்

    அப்போது ஜான் ஆலன் காணாமல் போன அதே இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஆதிவாசிகள் நின்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தமான் தீவுகளின் டிஜிபி தீபேந்திர பதாக் கூறுகையில் வடக்கு சென்டினல் வழக்கை கையாள்வது சிரமமாக உள்ளது.

    டுவிட்டர் பக்கம்

    மேலும் சவாலான காரியம் கூட. எனினும் உளவியல் நிபுணர்கள், மானுடவியலாளர், உள்ளூர்வாசிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Andaman and Nicobar Island DGP Dependra Pathak tweet that Handling challenging North Sentinel Island case. Most challenging ever. Consulting Anthropologists/Psychologist/locals. Hopeful.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X