• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்

|

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 இளம் பெண்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

  Andhra-வில் கொடூரம்..பெற்ற மகள்களையே நரபலி கொடுத்து பூஜை செய்த தம்பதி | Oneindia Tamil

  இதனிடையே, கொலையாளிகளான அந்த இளம் பெண்களின் பெற்றோர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை அந்த பெண் ரொம்பவே டார்ச்சர் செய்து கத்தி கூச்சல் போட்டு களேபரம் செய்துவிட்டாராம்.

  திருப்பதி அருகேயுள்ள மதனபள்ளி அரசு மகளிர் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றுபவர் புருஷோத்தம் நாயுடு (56). இவரது மனைவி பத்மஜா (53). இவரும் நன்கு படித்து தனியார் கல்லூரி முதல்வராக பணிபுரிந்தவர்தான்.

  இரு மகள்கள்

  இரு மகள்கள்

  இவர்களுக்கு அலக்யா (27), சாய் திவ்யா (22) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில், அலக்யா மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் விடுப்பு காரணமாக, பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார் அலக்யா. சாய் திவ்யா, பிபிஏ படித்து முடித்தவர். தற்போது இசை பயின்று வந்தார்.

  மந்திரம்

  மந்திரம்

  இவர்கள் குடும்பம் கடந்த வருடம்தான் மதனபள்ளியில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளது. ஆனால் வந்தது முதலே, அடிக்கடி பூஜை, மந்திரம் என ஈடுபட்டு வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினரிடம் அதிகம் பழகுவது கிடையாதாம். இதற்கு குழந்தைகளும் சம்மதித்துதான் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  நரபலி கொலை

  நரபலி கொலை


  இந்த நிலையில்தான், நேற்று முன்தினம், அலக்யாவை பூஜையில் உட்கார வைத்து, வாயில் தாமிர சொம்பை வைத்து அடித்து கொலை செய்துள்ளனர் அவரின் பெற்றோர். இளையமகள் சாய் திவ்யாவின் வயிற்றை சூலத்தால் குத்தி கிழித்து படுகொலை செய்துள்ளனர். இவர்கள், உடல்கள் கிடந்த இடத்தில் மந்திரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. எனவே நரபலி நடந்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

  பெற்றோர் கைது

  பெற்றோர் கைது

  இந்த சம்பவம் பற்றி புருஷோத்தம் நாயுடு தனது உடன் பணியாற்றும் ஒருவருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது இந்த கொலை பற்றி போலீசுக்கு தெரியவந்தது என்றும் கூறப்படுகிறது. எப்படியோ காவல்துறைக்கு தெரிந்து 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இன்று புருஷோத்தம் மற்றும் பத்மஜாவை கைது செய்துள்ளனர்.

  தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள்

  தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள்

  இவர்கள் கொடுத்த வாக்குமூலம்தான் அதிர்ச்சி ரகம். "குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம், நல்ல வருங்காலத்தை கொடுக்கவே சிறப்பு மந்திர பூஜைகள் செய்தோம் எங்களது மகள்கள் இறக்கவில்லை. விரைவில் அவர்கள் தூங்கி எழுந்து விடுவார்கள்." என்று, கூலாக போலீசாரிடம் சொல்லி அதிர்ச்சியின் அடுத்தகட்டத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர் அந்த அடாவடி பெற்றோர்.

  குடும்பமே அப்படித்தான்

  குடும்பமே அப்படித்தான்

  போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக, இந்த குடும்பமே "ஒரு மாதிரியான" மனநிலையில் தான் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் சாய் திவ்யா வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் தான் அவரை தடுத்துள்ளனர். ஆனால் இதன் பிறகு பூஜை மந்திரம் என்று மொத்த குடும்பமும் ரொம்பவே பிஸி ஆகிவிட்டது.

  சிசிடிவி காட்சிகள்

  சிசிடிவி காட்சிகள்

  சாய் திவ்யா சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் வித்தியாசமான போஸ்ட்களை ஷேர் செய்து வந்துள்ளார். இதுபற்றி அவரது நண்பர்கள் விசாரித்ததற்கு எதையோ சொல்லி மழுப்பி விட்டார். இந்த நிலையில்தான் வீட்டை சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  நரபலி தாய் டார்ச்சர்

  நரபலி தாய் டார்ச்சர்

  இதனிடையே, கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றபோது, பத்மஜா ஏதேதோ கூறி கத்தி கூச்சல் போட்டார். சிவனின் மறு அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொண்டார். கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது என்றும் பிதற்றியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் தெளிவாகத்தான் இருந்தாராம் பத்மஜா. இப்போது போலீசாரை இப்படி பாடாய் படுத்தி வருகிறாராம். அவருக்கு உண்மையிலேயே மனநிலை பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? நடிக்கிறாரா? இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  English summary
  Andhra Pradesh: A couple was arrested by Madanapalle Rural Police yesterday for allegedly killing their daughters in Chittoor district.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X