For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்!

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏற்கெனவே சந்திரபாபு நாயுடுவுக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அது அதிகமாகிவிட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஜெகன் மோகன் அரசு முன் வைத்து வருகிறது.

ராஜ்ய சபாவில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை.. என்ன பேசுவார்? எதிர்பார்ப்பு!ராஜ்ய சபாவில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை.. என்ன பேசுவார்? எதிர்பார்ப்பு!

தற்கொலை

தற்கொலை

இந்த நிலையில் ஆந்திரத்தில் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர் ஒருவரை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியும், போலீஸாரும் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

நாரா லோகேஷ்

நாரா லோகேஷ்

இந்த நிலையில் இறந்த தொண்டரின் குடும்பத்தினரை தெலுங்கு தேச கட்சியின் நாரா லோகேஷ் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி பிரிவினையை ஏற்படுத்தி வந்தார். அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியோ சைக்கோ போல் செயல்படுகிறார்.

தற்கொலை

தற்கொலை

கடந்த ஆட்சி காலத்தில் வளர்ந்த மாநிலமாக இருந்த ஆந்திரம் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக மாறியது. ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 241 விவசாயிகள், 43 கட்டடப் பணியாளர்கள், இரு ஊழியர்கள், 5 தெலுங்கு தேச தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

குற்றச்செயல்கள்

குற்றச்செயல்கள்

மேலும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 690 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 8 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 5 மாதங்களில் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என நாரா லோகேஷ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

English summary
Chandra Babu Naidu's son Nara Lokesh criticises Andhra CM YS Jagan Mohan Reddy is a Psycho.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X