For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரதட்சணை கொடுமை… ஆந்திரா முதலிடம் பிடித்தது…

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது.

அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன.

ஒடிசாவுக்கு இரண்டாவது இடம்:

ஒடிசாவுக்கு இரண்டாவது இடம்:

ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது.

பரவாயில்லை தமிழ்நாடு:

பரவாயில்லை தமிழ்நாடு:

மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவி்த்து உள்ளது.

வரதட்சணை கொடுமை இல்லை:

வரதட்சணை கொடுமை இல்லை:

அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை வழக்குள் பதியப்படாவிட்டாலும் பிறவழக்குகள் அதி்கரித்து காணப்படுகி்ன்றன என்கிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை.

நாங்க வரதட்சணை மட்டும்தான் கேட்போம்:

நாங்க வரதட்சணை மட்டும்தான் கேட்போம்:

அதேநேரம் உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் வரதட்சணை கொடுமை தவிர பிற வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In dowry cases Andhra get placed in first. More than 1000 cases filed in Andhra for dowry problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X