விஜயவாடா தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் நிவாரணம்.. ஆந்திர அரசு
அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வரும் சொர்ணா பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியும் மாடிகளிலிருந்து குதித்து தப்ப முயற்சித்தும் 11 பேர் பலியாகிவிட்டனர்.

மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து முழுமையாக கேட்டறிந்தார்.
குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி
தீவிபத்திற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் வழங்கப்படும் என ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஜெகன்மோகனை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.