For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவர் பேச்சு எதிரொலி.. சொந்த கட்சி எம்.பி.யை தேசதுரோக வழக்கில் ஜெயிலில் போட்ட ஜெகன் மோகன் ரெட்டி!

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. கிருஷ்ணம் ராஜூ அதிரடியாக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுரையீரல் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் காலமானார்நுரையீரல் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் காலமானார்

கட்சி மாறி எம்பி

கட்சி மாறி எம்பி

ஆந்திரா எம்.பி. கிருஷ்ணம் ராஜூ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து விலகி தெலுங்குதேசம், பாஜக கட்சிகளில் பணியாற்றியவர். 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்தார்.

ஜெகன் கட்சியில் கலக குரல்

ஜெகன் கட்சியில் கலக குரல்

அண்மைக்காலமாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகிறார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை

ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை

இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுவதாகவும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணம் ராஜூ கூறி வந்தார். இதனால் ஆந்திரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தேசதுரோக வழக்கில் கைது

தேசதுரோக வழக்கில் கைது

இந்நிலையில்தான் ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் கிருஷ்ணம் ராஜூ அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது அரசுக்கு எதிராக சதி செய்தல், தேசதுரோக வழக்கு என பல வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டி வருகிறார்; இரு பிரிவினிரிடையே மோதலை ஏற்படுத்தும் வெறுப்பு பேச்சுகளை பேசுகிறார் எனவும் கிருஷ்ணம்ராஜூ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

English summary
Andhra MP Krishnam Raju was arrested by the Police for sedition Charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X