For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Andhra Pradesh Assembly Furniture recovered from Ex speaker Sivaprasad Rao's son's shop

    அமராவதி: ஆந்திர சட்டசபையில் காணாமல் போன ஃபர்னிச்சர்கள் அனைத்தும் முன்னாள் சபாநாயகரின் மகனுக்குச் சொந்தமான கடையில் இருந்து மீட்கப்பட்டது.

    ஆந்திரப்பிரதேச முன்னாள் சபாநாயகர் கோடேலா சிவ பிரசாத் ராவ். இவரது மகன் சிவராம கிருஷ்ணாவுக்கு சொந்தமான ஷோரூம் குண்டூரில் உள்ளது.

    இந்த ஷோரூமில் ஆந்திர பிரதேச சட்டப்பேரவைக்கு சொந்தமான மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இருந்ததை சட்டசபையின் அலுவலர்கள் கண்டு கொண்டனர்.

    சிவராமகிருஷ்ணா

    சிவராமகிருஷ்ணா

    இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராவ் மற்றும் அவரது மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிவராமகிருஷ்ணாவின் கடைக்கு சென்று போலீஸார் சோதனை செய்தனர்.

    அமராவதி

    அமராவதி

    அப்போது சட்டசபைக்கு சொந்தமான 70 பொருள்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திரம், தெலுங்கானா என இரண்டாக பிரிந்தது. இதில் ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது.

    வீடு மற்றும் கடை

    வீடு மற்றும் கடை

    இதையடுத்து ஹைதராபாத்தில் இயங்கி வந்த ஆந்திர சட்டசபையை அமராவதிக்கு மாற்றப்பட்டபோது அங்கிருந்த மரச்சாமான்களை சபாநாயகராக இருந்த கோடேலா சிவபிரசாத் ராவ் தனது வீடு மற்றும் கடைக்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டார்.

    இல்லை

    இல்லை

    இதை அவரே ஒப்புக் கொண்டார். சட்டசபையில் உள்ள பொருட்கள் சேதமாகிவிடக் கூடாது என்பதற்காகவே தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்திருந்ததாக கூறியிருந்தார். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என ராவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Andhra Pradesh Assembly Furniture recovered from Ex speaker Sivaprasad Rao's son's shop.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X