For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு!

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தற்போது கொல்கத்தாவில் சந்தித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் வெற்றியை தீர்மானிக்க போகும் 3 மாநிலங்கள்- வீடியோ

    கொல்கத்தா: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இந்த கூட்டணியை உருவாக்கும் பணியில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    Andhra Pradesh CM Chandrababu meets CM Mamata Banerjee in Kolkata

    மாநில தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்தார். இந்த நிலையில்தான் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது.

    இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எதுவும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வரவில்லை. எல்லா முடிவுகளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியது. இதனால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் இருக்கிறது.

    இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு எந்த கவலையும் இன்றி மீண்டும் தனது தேர்தல் பேச்சுவார்த்தையில் களமிறங்கி உள்ளார். லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக இவர் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளார். சந்திரபாபு நாயுடு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தற்போது கொல்கத்தாவில் சந்தித்தார்.

    Andhra Pradesh CM Chandrababu meets CM Mamata Banerjee in Kolkata

    கொல்கத்தாவில் இவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எக்ஸிட் போல் கணிப்புகள் எல்லாம் பொய்யானது என்று ஏற்கனவே மமதா பானர்ஜி குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு குறித்தும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சந்திபாபு நாயுடு மூன்று முக்கிய திட்டங்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

    உடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..! உடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..!

    தேர்தலில் எதிர்க்கட்சிகள் அதிக இடம் பெற்றால் என்ன செய்யலாம், தோல்வி அடைந்தால் என்ன செய்யலாம், யாரை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து இவர் மூன்று திட்டங்களை மமதாவிடம் தெரிவித்தார் என்கிறார்கள்.

    சந்திரபாபு நாயுடுவின் முன்னெடுப்புதான் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Andhra Pradesh CM & TDP leader N Chandrababu Naidu meets CM & TMC leader Mamata Banerjee in Kolkata.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X