For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி மகனின் திருமணத்துக்கான செலவு மொத்தமே ரூ 18 ஆயிரம்தான்! வாட் ஏ சிம்பிள் மேரேஜ்!

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திர ஐஏஎஸ் அதிகாரியின் மகனின் திருமணத்துக்கான செலவு மொத்தமே ரூ 18 ஆயிரம் ஆகும். இரு வீட்டாரும் சேர்ந்து சாப்பாட்டு செலவு உள்பட செய்த செலவு இதுவாம்.

திருமணம் என்றாலே நாம் போடும் பட்ஜெட்டை தாண்டி குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு செலவு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் வசதி வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் சிலர் கடன்களை பெற்றாவது திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

திருமணம்

திருமணம்

இன்னும் சில திருமணங்கள் பதிவு அலுவலகத்துடனும் கோயிலுடனும் நடைபெறுவதையும் பார்த்துள்ளோம். ஆனால் இதுவரை குறைந்த செலவவில் வசதி வாய்ப்புள்ளவர்கள் திருமணம் நடத்தி நாம் பார்த்ததில்லை.

செலவு

செலவு

ஆனால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பட்னாலா பசந்த் குமார் தனது மகனின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த முடிவு செய்துள்ளார். வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த திருமணத்துக்கு ரூ. 18000 மட்டுமே செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் திருமணம்

குறைந்த செலவில் திருமணம்

திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கான சாப்பாடு செலவும் இதில் அடங்கியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசந்த் குமார் தனது மகளின் திருமணத்தை ரூ. 16 ஆயிரத்து 100 மட்டுமே செலவு செய்துள்ளார். அந்த வகையில் மகன் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆளுநர் பங்கேற்பு

ஆளுநர் பங்கேற்பு

பசந்த் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுநர் நரசிம்மனுக்கு துணை செயலாளராகவும் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த திருமணத்தில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர் இஎஸ்எல் நரசிம்மன் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்குகிறார்.

English summary
The families of bridegroom and bride in Andhra Pradesh will bear an expenditure of Rs. 18,000 each on the ceremony, including the lunch for the guests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X