For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள் அடையாளம் தெரிந்தது: பெண்கள் உட்பட மூவர் போட்டோ வெளியீடு

ஆந்திர எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகள் படம் வெளியிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திர எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள் அடையாளம் தெரிந்தது

    விசாகப்பட்டினம்: ஆந்திர எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகள் படம் வெளியிடப்பட்டுள்ளது

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ்.

    எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவோயிஸ்டுகள் விசாரணை நடத்தினர்.

    எம்எல்ஏக்களிடம் விசாரணை

    எம்எல்ஏக்களிடம் விசாரணை

    வழக்கமாக மாவோயிஸ்டுகள் கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம். அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

    சோமா சுட்டுக்கொலை

    சோமா சுட்டுக்கொலை

    அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.

    நாடு முழுவதும் பரபரப்பு

    நாடு முழுவதும் பரபரப்பு

    அடுத்ததாக சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போட்டோக்கள் வெளியீடு

    இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகளின் படங்களை ஆந்திரா போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

    எஸ்பி வெளியிட்டார்

    எஸ்பி வெளியிட்டார்

    மாவோயிஸ்ட் சீனுபாபு, காமேஸ்வரி, வெங்கட்ரவி சைதன்யா புகைப்படங்களை விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ராகுல் சர்மா வெளியிட்டார்.

    English summary
    Andhra pradesh Police have released 3 Maoists photos who killed Andhra MLAs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X