For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Google Oneindia Tamil News

திருப்பதி: சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.

Andhra Pradesh: statewide bandh called by AP Pratyeka Hoda Sadhana Samithi for special category status

இந்தநிலையில், ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, ஆளும்கட்சி ஆதரவுடன் நடக்கும் போராட்டத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்றுள்ளன.

முழு அடைப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆந்திர மாநில எம். பிக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Andhra Pradesh: Congress & CPI take part in day-long statewide bandh called by AP Pratyeka Hoda Sadhana Samithi for special category status for the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X