For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உகாண்டாவில் வங்கி கணக்கு.. ரூ.20 கோடி சொத்து.. ரெய்டில் அதிரவைத்த கர்னூல் மோட்டார் வாகன ஆய்வாளர்

Google Oneindia Tamil News

கர்னூல்: ஆந்திரா மாநிலம் கர்னூலில் மோட்டார் வாகன ஆய்வாளரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 கோடிக்கு மேல் முறைகேடாக சொத்துக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது.

இதையடுத்து அவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதிஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதி

போலீஸ் கண்டுபிடிப்பு

போலீஸ் கண்டுபிடிப்பு

ஆந்திராவில் உள்ள அவரது வீடு, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு கிலோ தங்கம்

ஒரு கிலோ தங்கம்

பெங்களூருவில் 3 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் ஹைதராபாத்தில் ஒரு கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் ஹைதராபாத், பெங்களூரு, தாதிபத்ரி மற்றும் உகாண்டா நாட்டில் சிவபிரசாத் வங்கி லாக்கர் வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சுட்கேஸ் கம்பெனி

சுட்கேஸ் கம்பெனி

கர்னூலில் உள்ள சிவபிரசாத்தின் வீட்டில் இருந்து ஒரு கிலோ தங்கம், ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளார்கள். இரண்டு சூட்கேஸ் கம்பெனிக்கு சிவபிரசாத்தின் மனைவி உரிமையாளராக இருப்பதையும் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மிகப்பெரிய முறைகேடு

மிகப்பெரிய முறைகேடு

தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத்திற்கு சொந்தமான இடங்களில் ஆந்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்மைக்காலத்தில் ஆந்திராவில் சிக்கிய அரசு ஊழியர்களில் சிவபிரசாத்தான் அதிக லஞ்சம் வாங்கியவர் என்பது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Andhra: ACB raid on Motor Vehicle Inspector Siva Prasad's Kurnool residence, Rs 20 crore assets unearthed seized
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X