For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெகன் மோகன் ரெட்டியும், கோயில்கள் மீதான தாக்குதல்களும் - ஒரு பார்வை

Google Oneindia Tamil News

ஆந்திரா: ஆந்திர பிரதேசத்தில் கடந்த காலங்களில் கோயில்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த பட்டியல் இங்கே

ஆந்திராவில் கோயில்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் இதுபோன்ற 100 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்கள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தூண்டுதல் பேரில் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

andhra temple row cm jagan blamed for temple vandalism

ஆந்திராவில் கோயில்கள் மீது நடத்தப்பட்ட சில தாக்குதல் மற்றும் முறைகேடுகள் சம்பவங்கள் பின்வருமாறு:

ஜூன் 10, 2019: கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் அதிக வருவாய் ஈட்டும் ஹூண்டி கோயிலின் வருவாயில் முறைகேடுகள் பதிவாகியுள்ளன. இதுவரை இதில் எவரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஜூலை 9, 2019: சில சமூக விரோத சக்திகள் அந்தர்வேதியில் உள்ள பிரபல ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமியின் தேருக்கு தீ வைத்தனர். இதில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9, 2019: கோட்டூரில் உள்ள மாடுகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒரே இரவில் 100 மாடுகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

ஆகஸ்ட் 22, 2019: சித்தூரின் திருமலைக்கு செல்வதற்கான ஆர்.டி.சி பஸ் டிக்கெட்டுகள் மூலம் மதப் பிரச்சாரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டு TTD ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 2, 2019: ஸ்ரீசைலம், கனகதுர்கம்மா கோயில்கள் உட்பட 150 கோயில்களின் வாரியங்கள் அகற்றப்பட்டன.

செப்டம்பர் 23, 2019: TTD இணையதளத்தில் கிறிஸ்தவ பாடல்கள் வெளியிடப்பட்டன. சித்தூர் மாவட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) கீதா அம்ருதலஹாரியின் 182, 183 மற்றும் 184 பக்கங்களில் பிற மதங்களின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், 3 TTD ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வலிமை பெற்ற இந்திய கிரிக்கெட் அஸ்திவாரம் - வியக்க வைக்கும் டிராவிட் ஸ்டிராடஜி!வலிமை பெற்ற இந்திய கிரிக்கெட் அஸ்திவாரம் - வியக்க வைக்கும் டிராவிட் ஸ்டிராடஜி!

செப்டம்பர் 24, 2019: திருப்பதிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வந்த பொழுது, அலிபிரி டோல் பிளாசாவுக்கு அருகிலுள்ள முக்கிய தெய்வ சின்னங்கள் டி.ஆர்.எஸ் கட்சியைக் குறிக்கும் ரோஸ் நிறத்தில் வரையப்பட்டிருந்தன.

செப்டம்பர் 27, 2019: 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு தயாரிக்கப்பட்ட அன்னை துர்காவின் 20 சிலைகள் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கினாடாவில் உள்ள சர்பாவரம் என்ற இடத்தில் அழிக்கப்பட்டன.

செப்டம்பர் 30, 2019: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) கையொப்பம் இல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டியால் திருமலை கோயில் சிலைகளுக்கு ஆடைகளை வழங்கப்பட்டது.

நவம்பர் 11, 2019: அன்னாவரம் மலை உச்சியில் உள்ள ராஜ வெங்கட்ராம ராய கலா கோவிலில் கிறிஸ்துவ பாடல்களைப் பாடுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை கண்காணிப்பாளர் நிறுத்த முயன்றபோது, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அவர் தாக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் 25, 2020: மேற்கு கோதாவரி மாவட்டத்தின் திருமலை, துவாரகாவில் உள்ள கோயில் வளாகத்தில் நின்று டெண்டுலுரு எம்.எல்.ஏ அபயா சவுத்ரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டிசம்பர் 29, 2020: நெல்லிமார்லா மண்டலத்தில் உள்ள ராமதீர்த்தத்தில் இருக்கும் ராமரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலையின் தலை உடைக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டது. இந்த சிலை விஜயநகரம் மாவட்டத்தின் ராமதீர்த்தத்தில் 400 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த விவகாரத்தில் சில TDP தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தின் பின்னணியில் TDP இருப்பதாக டி.ஜி.பி-யே குறிப்பிட்டிருந்தார்.

English summary
cm jagan reason for temple attacks in andhra? Here reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X