For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சின் டெண்டுல்கரை "தெறிக்க" விட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை போட்டு பிராண்டி எடுத்து விட்டார் சச்சின் டெண்டுல்கர். அவர்களது சேவையை கடுமையாக விமர்சித்து சச்சின் டிவிட் போட, அது அனல் பரப்பி விட்டது இந்தியாவில்.

அமெரிக்காவில் ஷேன் வார்னேவுடன் இணைந்து நடத்தும் ஆல் மாஸ்டர் சீரிஸ் கிரிக்கெட் தொடருக்காக அங்கு முகாமிட்டுள்ளார் சச்சின். இரு போட்டிகளில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோற்று விட்டது.

'Angry' Sachin Tendulkar blasts British Airways for 'don't care attitude'

இந்த நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்த இரு காரியங்கள், சாதுவான அவரைக் கொந்தளிக்க வைத்து விட்டது.

இதுதொடர்பாக சச்சின் போட்ட முதல் டிவிட்டில், எனது குடும்ப உறுப்பினர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தார். ஆனால் சீட் இருந்தும் கூட அதை உறுதிப்படுத்தவில்லை பிரிட்டிஷ் ஏர்வேஸ். மிகவும் மோசமான, அக்கறை இல்லாத சேவை இது. இது பெரும் ஏமாற்றமளிக்கிறது, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் சச்சின்.

இன்னொரு டிவிட்டில், தவறான இடத்திற்கு எனது லக்கேஜை அனுப்பி வைத்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். அக்கறையில்லாத சேவை என்று சாடியிருந்தார்.

இந்த டிவிட்கள் சச்சீின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பி விட்டன. ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதற்குப் பதிலளித்து போட்ட இன்னொரு டிவிட்தான் சச்சின் ரசிகர்களை கோபப்படுத்தி விட்டன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் போட்ட டிவிட்டில், ஸாரி சச்சின். தயவு செய்து உங்களது பேக்கேஜின் எண், உங்களது முழுப் பெயர், முகவரி உள்ளிட்டவற்றைச் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தது.

இதையடுத்து கொந்தளித்த சச்சின் ரசிகர்கள், அதெப்படி கிரி்கெட்டின் கடவுளாக நாங்கள் போற்றும் சச்சினின் முழுப் பெயர் கூட தெரியாமல் இருக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்று போட்டுத் தாளிக்க ஆரம்பித்து விட்டனர்.

English summary
An angry Sachin Tendulkar, on Friday has hit out at British Airways for their "bad service" and "don't care attitude".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X