For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் வருகின்றது மனிதர்களுக்கான - விலங்கு உறுப்பு மாற்று சிகிச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: வளர்ச்சி அடைந்து வரும் மருத்துவ உலகின் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் இன்னும் சில காலங்களில் விலங்குகள் மனிதர்களுக்கான மாற்று உறுப்புகளை அளிக்கமுடியும் .

அப்படிப்பட்ட மாற்று உறுப்பு தானம் தொடர்புடைய புது நம்பிக்கையை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுவரும் புது ஆய்வில் மரபணு மூலம் உருவாக்கப்பட்ட பன்றிகளின் இதயங்களை எடுத்து பபூன் குரங்குகளுக்கு வைத்துள்ளனர்.

வெற்றிகரமான இதயம்:

வெற்றிகரமான இதயம்:

இந்த இதயங்கள் 500 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. இருந்தாலும், உறுப்பு பெறும் மனிதரின் நோய் எதிர்ப்பு அமைப்பு பிற திசுக்களை நிராகரிப்பது ஆய்வாளர்களுக்கு கடினமான சவாலாக இருந்துள்ளது.

மனிதனை ஒத்த உடற்கூறு:

மனிதனை ஒத்த உடற்கூறு:

பன்றிகளின் உடற்கூறியல் மனிதர்களை ஒத்திருப்பதாலும், அவை விரைவில் வளரும் தன்மை கொண்டவை என்பதாலும் பன்றிகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மரபணு மாற்ற இதயங்கள்:

மரபணு மாற்ற இதயங்கள்:

இதன் அடுத்தகட்ட முயற்சியாக குரங்குகளின் இதயங்கள் நீக்கப்பட்டு பன்றிகளின் மரபணு மாற்றப்பட்ட இதயங்களை நேரடியாகப் பொருத்தி விளைவுகள் கண்காணிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்காலிக உறுப்புகள்:

தற்காலிக உறுப்புகள்:

இதுபோல் விலங்குகளில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கணையம், நுரையீரல் போன்றவை மனிதர்களுக்கு பொருத்தப்பட முடியும் அல்லது பிறரிடமிருந்து மாற்று உறுப்புகள் கிடைக்கும்வரை இவற்றை தற்காலிகமாக செயல்பட வைக்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

English summary
Using animals as a source of organs for transplantation into humans was once one of medicine's next big things - a solution to transplant waiting lists.However, there have been problems with rejection - and recently stem cells have been grabbing the spotlight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X